பலம் இருந்தால் வெளிப்படையாக மோதுங்கள் என வாகனம் மீது கல்வீச்சு நடந்த சம்பவத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு சவுகான் சவால் விடுத்துள்ளார்....!
மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சிதி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பாதுகாப்பு படையினர் சூழ ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சர்ஹட் தொகுதியில் அவரது வாகனம் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் கார் மீது கல்லை வீசினர். இதில் முதல் மந்திரி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் சவுகானுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. சவுகான் சென்ற பகுதி எதிர்க்கட்சி தலைவர் அஜய் சிங்கின் சட்டமன்ற தொகுதியாகும்.
இதன் பின்னர் பொது கூட்டமொன்றில் பேசிய சவுகான், அஜய் சிங், உங்களுக்கு பலம் இருந்தால் வெளிப்படையாக வந்து என்னுடன் மோதுங்கள் என பேசினார்.
ஆனால் அஜய் சிங், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபடவில்லை. வன்முறை கலாசாரத்தினை எங்கள் கட்சி பின்பற்றுவதில்லை என கூறினார்.
இது என் மீதும் மற்றும் சுர்ஹாத் பகுதி மக்கள் மீதும் அவதூறு பரப்ப திட்டமிடப்பட்ட சதி என்றே சந்தேகிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து மாநில பாஜகவினர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் தொகுதியில் முதல் மந்திரியை குறிவைத்து தாக்குதல் நடந்துள்ளது என தெரிவித்தனர். ஆனால், பாஜகவின் குற்றச்சாட்டுக்கு எதிர்க் கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.