அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரெயின்போரில் என்ற இடத்தில் பி.ஜே.பி தலைவர் பிரதமர் மோடியின் உருவ சிலை லேசர் லைட்டில் ஒளிபரப்பப்பட்டது.
இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள குஜராத் மாநிலத்தில், 33 மாவட்டங்கள், 182 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலதிற்கு வருகிற டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு 2 கட்டமாக நடைபெறும். டிசம்பர் 9-ம் தேதி மற்றும் 14-ம் தேதி என வாக்குபதிவு இரண்டு கட்டமாக நடைபெறும். குஜராத் மாநிலத்தில் முதலாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடியும் கட்டத்தில் இருந்ததால், காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி தீவிர பிரசாரத்தில் இன்று ஈடுபட்டனர்.
1998 முதல் குஜராத்தில் பிஜேபி அதிகாரத்தில் உள்ளது. இந்த மாதம் நடக்கும் குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால் அனைவரின் பார்வை குஜராத் தேர்தலின் மீது உள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் ஹர்திக் படேலுடன் கைகோர்த்திருப்பதால் பாரதீய ஜனதா கட்சிக்கு கடும் நெருக்கடி உருவாகி உள்ளது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் நேற்று மாலை 5 மணியுடன் முதலாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைந்ததையடுத்து. அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரெயின்போரில் பி.ஜே.பி யின் தொண்டர்கள் பிரதமர் மோடியின் உருவ சிலையை லேசர் லைட்டால் ஒளிபரப்பினர்.
அதை தொடர்ந்து மோடி இன்று மகிழ்ச்சி தெரிவித்தி கொண்டார். மேலும் அவர்,பா.ஜ.க. தலைவர்கள் வெள்ள நிவாரணம் அளித்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூருவில் உள்ள நீச்சல் குளத்தில் ஓய்வெடுத்து வருகின்றனர் என்றும்சுட்டிக்காட்டினார்.
#WATCH #Visuals from BJP's laser light show at Sabarmati Riverfront in Ahmedabad, last night #GujaratElection2017 pic.twitter.com/hZAKX5WEIJ
— ANI (@ANI) December 8, 2017