Startup நிறுவனங்களுக்கு நற்செய்தி: உதவ வருகின்றன இரண்டு முக்கிய திட்டங்கள்!!

கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான திணைக்களமான DPIIT, நாட்டில் தொடக்க நிறுவனங்களை ஆதரிப்பதற்காக இரண்டு திட்டங்களில் பிரத்தியேகமாக செயல்பட்டு வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 14, 2020, 06:45 PM IST
  • Startup நிறுவனங்களுக்கு கூடுதல் ஆதரவு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
  • நாட்டில் Startup நிறுவனங்களை ஆதரிக்க இரண்டு திட்டங்களில் பிரத்தியேகமாக செயல்பாடுகள்.
  • இரண்டு திட்டங்களுக்கும் நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் தேவைப்படும்.
Startup நிறுவனங்களுக்கு நற்செய்தி: உதவ வருகின்றன இரண்டு முக்கிய திட்டங்கள்!! title=

நீங்கள் ஒரு வர்த்தகத்தைத் தொடங்கியிருந்தாலோ (Startup) அல்லது சொந்தமாக ஒரு தொழிலைத் துவக்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தாலோ, உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. Startup நிறுவனங்களுக்கு கூடுதல் ஆதரவு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான திணைக்களமான DPIIT, நாட்டில் தொடக்க நிறுவனங்களை ஆதரிப்பதற்காக இரண்டு திட்டங்களில் பிரத்தியேகமாக செயல்பட்டு வருகிறது. பி.டி.ஐ செய்திகளின்படி, இந்த திட்டங்கள் கடன் உத்தரவாதம் (Loan Guarantee) மற்றும் தொடக்க மூலதனம் தொடர்பானவை.  DPIIT-ன் செயலாளர் குர்பிரசாத் மகாபத்ரா இந்த தகவலை வழங்கினார்.

ALSO READ: FD-ன் சில பிரிவுகளில் வட்டி விகிதங்களை மாற்றியது SBI: முழு விவரம் உள்ளே!!

இந்த இரண்டு திட்டங்களின் முறைகளை தீர்மானிக்க அமைச்சர்களுக்கிடையேயான ஆலோசனை செயல்முறை நடந்து வருவதாக மகாபத்ரா செய்தி வெளியிட்டுள்ளார். இப்போது கடன் உத்தரவாதம் மற்றும் ஆரம்ப மூலதன திட்டத்தில் செயல்பட்டு வருவதாக மகாபத்ரா கூறினார். இரு விஷயங்கள் குறித்தும் அமைச்சர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன.

கடன் உத்தரவாதத் திட்டத்திற்கான நிதி, வங்கிகளுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார். Startup நிறுவனங்களுக்கு கடன் வழங்க வங்கிகள் இதைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் வங்கிகளுக்கு கடன் வழங்க அதிக வசதி கிடைகும் என்று மகாபத்ரா தெரிவித்தார். செய்திகளின் படி இது கடன்களுக்கானது, வென்சர் கேபிடல்களுக்கானது அல்ல.

ஆரம்ப மூலதனத் திட்டத்தில், பெரும்பாலான Startup நிறுவனங்களுக்கு யோசனை மட்டத்தில் பணம் திரட்டுவது கடினமாக உள்ளது என்று மகாபாத்ரா கூறினார். குஜராத், கேரளா போன்ற சில மாநிலங்களில் ஆரம்ப மூலதன திட்டங்கள் உள்ளன. ஆனால் இது மிகவும் குறைவு என்று செயலாளர் கூறினார். மத்திய அரசு அமைச்சகங்களின் திட்டமும் உள்ளது. ஆனால் இதுபோன்ற திட்டங்கள் நாடு முழுவதும் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்றார் அவர்.

இரண்டு திட்டங்களுக்கும் நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் தேவைப்படும் என்று அவர் கூறினார். அதன் பிறகு, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான திணைக்களம் இரண்டு திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறும். சில Startup நிறுவனங்கள் பணியாளர் பங்கு விருப்பத் திட்டமிடல் தொடர்பாக சில பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக மகாபத்ரா கூறினார். இவை வருவாய் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ALSO READ: Insurance, Investment: வித்தியாசம் என்ன? புரிந்து கொண்டு பணத்தை முதலீடு செய்யுங்கள்!!

Trending News