நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டுள்ள, இந்து அமைப்புகளைச் சேர்ந்த இரண்டு லட்சம் பேர் நாளை அயோத்தியை அடைகின்றனர்.
மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்ததும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான எந்த முயற்சியையும் அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க. மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இவற்றை விரைவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டதையடுத்து இந்து அமைப்புகள் மத்திய அரசுக்கு நெருக்குதல் அளித்துவருகின்றன.
RSS வி,ஹெச்.பி உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தத் தொடங்கியுள்ளன. மீண்டும் அசாதாரணமான சூழல் ஏற்படும் என்று எச்சரித்து ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான இந்துத்துவா தொண்டர்கள் அயோத்தியை நோக்கி பேரணியாக சென்றுள்ளனர்.சுமார் இரண்டு லட்சம் பேர் நாளை அயோத்தியை அடைய உள்ளனர். இதனால் அயோத்தியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Visuals of security in Ayodhya. VHP and Shiv Sena will hold separate events in the city tomorrow over the matter of #RamTemple. pic.twitter.com/cD0PPn0GHI
— ANI UP (@ANINewsUP) November 24, 2018
அணிதிரளும் இந்துத்துவா தொண்டர்களை அயோத்திக்கு வெளியே நிறுத்துவதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மக்களவையில் ராமர்கோவில் கட்டுவது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களவையில் மசோதா நிறைவேறுவதில் தடை ஏற்பட்டால், அவசர சட்டம் பிறப்பிக்கவும் மத்திய அரசு வியூகம் வகுத்துள்ளது.