இந்திய ரயில்வே முதல் முறையாக தேசிய எல்லைகளுக்கு அப்பால் சிறப்பு சரக்கு ரயிலை இயக்கி உள்ளது.
இந்த சரக்கு ரயிலில், 19.9 டன் எடை கொண்ட 466 மிளகாய் வத்தல் மூட்டைகள் எல்லை கடந்து கொண்டு செல்லப்பட்டன.
குண்டூர்(Guntur): ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் மிளக்காய் வத்தலுக்கு பெயர் பெற்றது. இந்திய ரயில்வே முதன்முறையாக நாட்டின் எல்லைக்கு அப்பால் சிறப்பு சரக்கு ரயிலை இயக்கி, இங்கிருந்து மிளகாய் வத்தலை பங்களாதேஷின் பெனாபோலுக்கு கொண்டு சென்றது
ALSO READ இந்தியாவுடான எல்லை மோதலுக்கு சீனா கொடுத்த விலை என்ன…!!!
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் தனது ட்விட்டர் கணக்கில் இந்த செய்தியை அறிவித்து, "தேசிய எல்லைகளுக்கு அப்பால்: ஏற்றுமதியில் பங்கெடுக்க தயாராகிறது இந்திய ரயில்வே, முதல் முறையாக, ரயில்வேயின் சிறப்பு சரக்கு ரயிலில் மிளகாய் வத்தலை பங்களாதேஷுக்கு கொண்டு செல்கிறது" என்று எழுதினார்.
Beyond National Borders: Railways under the dynamic leadership of PM @NarendraModi ji boosts exports!
For the first time, chillies were transported from India to Bangladesh via a Special Parcel Train. pic.twitter.com/vNchGiCd9q
— Piyush Goyal Office (@PiyushGoyalOffc) July 12, 2020
ஆந்திராவில் குண்டூர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பகுதிகள் மிளகாய் சாகுபடிக்கு பெயர் பெற்றவை.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மிளகாயின் தனித்துவமான சுவையினால், சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்டதாக உள்ளது.
முன்னதாக, குண்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளும் வணிகர்களும் மிளகாய் வத்தலை சாலை வழியாக பங்களாதேஷுக்கு சிறிய அளவில் அனுப்பி வருகின்றனர். அதற்கு டன்னுக்கு ரூ .7000 செலவாகும். லாக்டவுன் உள்ளதால், அவர்களால் சாலை வழியாக கொண்டு செல்ல முடியவில்லை. அதன் பின்னர் சரக்கு அனுப்புபவர்களை அணுகிய ரயில்வே அதிகாரிகள், சரக்குகளை ரயில் மூலம் அனுப்பலாம் என விளக்கினர்.
ALSO READ | பாகிஸ்தானை தாண்டி பலிக்காத சீனாவின் நரித் தந்திரம்: ஒரு அலசல்
சரக்கு ரயில்களில் அனுப்புவதற்கு, விவசாயிகள் மற்றும் வணிகர்கள் குறைந்த பட்சம் 1500 டன்களுக்கு மேல் அனுப்ப வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
இந்த சிக்கலைத் தீர்க்க, ரயில்வே துறை அதிகபட்சமாக 500 டன் வரை அனுப்ப ஏற்பாடு செய்தது. தென் மத்திய ரயில்வேயின் குண்டூர் பிரிவு இந்த முயற்சியை மேற்கொண்டு சிறப்பு சரக்கு ரயிலை பங்களாதேஷுக்கு அனுப்பியது.
சிறப்பு சரக்கு எக்ஸ்பிரஸ் மூலம் மிளகாய் வத்தல் எடுத்து செல்ல ஒரு டன்னுக்கு ரூ. 4,608 ரூபாய் செலவாகும். சாலை போக்குவரத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் சிக்கனமானது. சாலை மூலம் கொண்டு செல்ல ஒரு டன்னுக்கு 7,000 ரூபாய் செலவாகும்.
COVID-19 நெருக்கடி காலத்தில் சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க இந்திய ரயில்வே தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தியாவசிய பொருட்களை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் ரயில்வே சிறப்பு சரக்கு ரயில்களை தடையின்றி இயக்கி வருகிறது.
2020 மார்ச் 22 முதல் 2020 ஜூலை 11 வரை மொத்தம் 4434 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.