காஷ்மீர் பள்ளத்தாக்கில், மொபைல் போன் குறுகிய செய்தி சேவைகளை (SMS) இன்று நள்ளிரவு முதல் அரசாங்கம் மீட்டெடுக்கும் என்று ஜம்மு காஷ்மீர் அரசாங்க மூத்த அதிகாரி ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் முதன்மை செயலாளர் கன்சால், அரசாங்கத்தால் நடத்தப்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் பிராட்பேண்ட் இணைய சேவைகளும் ஜனவரி 1 முதல் மீட்டெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-னை திரும்ப பெருவதாக மத்திய அரசு அறிவித்து பின்னர் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் எனும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதனையடுத்து பிராந்தியத்தில் சட்ட ஒழுங்கினை காக்கும் விதமாக, இந்த ஆண்டு ஆகஸ்டில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியங்களில் மொபைல் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசி சேவைகளை அரசாங்கம் துண்டித்தது.
தற்போது தொலைபேசி இணைப்புகளை மீட்டெடுத்ததுள்ள போதிலும், இணையம் மற்றும் செய்தி சேவைகளுக்கான தடையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்புதல்களைத் ஜம்மு காஷ்மீர் அரசு தடுத்து நிறுத்தியுள்ளது.
SMS service to be restored in Kashmir valley from today midnight
Read @ANI story | https://t.co/koohNB8VKQ pic.twitter.com/z13BXto0L7
— ANI Digital (@ani_digital) December 31, 2019
யூனியன் பிரதேசமான லடாக்கின் ஒரு பகுதியான கார்கில், கடந்த வாரம் 145 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மொபைல் இணைய சேவைகள் திரும்ப அளிக்கப்பட்டது. ஆனால் ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் இந்த வசதி இன்னும் மீட்கப்படவில்லை.
காஷ்மீரில் SMS சேவைகளை மீட்டெடுப்பது, பாதுகாப்பு முகவர் கண்காணிக்க எளிதான ஒரு முயற்சியாக இருக்கும் எனவும், தகவல் தொடர்பு முற்றுகையைத் திரும்பப் பெறுவதற்கான முதல் படியாக இருக்கும் எனவும் ரோஹித் கன்சால் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்., மாணவர்கள், உதவித்தொகை விண்ணப்பதாரர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிறருக்கு வசதியாக மொபைல் போன்களில் குறுஞ்செய்தி வசதி கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி இயக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த செயல்முறை டிசம்பர் 31 நள்ளிரவு முதல் காஷ்மீர் முழுவதும் முழுமையாக மீட்டெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம், வீட்டு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து அரசியல் தலைவர்களை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் விடுவித்தது. ஸ்ரீநகரில் உள்ள MLA ஹாஸ்டலில் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும், பின்னர் மாநில நிர்வாகத்தால் விடுவிக்கப்பட்டார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த தலைவர்கள் (விடுவிக்கப்பட்ட தலைவர்கள் PDP தலைவர்கள் ஜாகூர் மிர் மற்றும் பஷீர் அஹ்மத் மிர், தேசிய மாநாட்டுத் தலைவர் குலாம் நபி பட் மற்றும் முன்னாள் சுதந்திர சட்டமன்ற உறுப்பினர் யாசிர் ரேஷி) பட்டியலில் முன்னாள் PDP சட்டமன்ற உறுப்பினர்கள், இரண்டு முன்னாள் தேசிய மாநாட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு முன்னாள் சுதந்திர சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையானது யூனியன் பிரதேசம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.