ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் ஹசீம் மன்சூர். நேற்று புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய இளையோர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த சிறுவனை வீழ்த்தி ஹசீம் மன்சூர் தங்கப்பதக்கம் வென்றான்.
தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 19 நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் பங்கு பெற்றார்கள். ஹசீம் மன்சூர் இறுதியில் இவர்கள் அனைவறையும் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தன் வசம் படுத்தினான்.
ஹசிம் மன்சூரின் கடின உழைப்பே இதை சாத்தியப்படுத்தியது என அவரின் பயிற்சியாளர் பசில் அலி தர் தெரிவித்துள்ளார்.
பட்டம் வென்ற ஹசீமனுக்கு ஆல் இந்திய யூத் கராத்தே சம்மேளனமும் பாராட்டு தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் இத்தாலியில் நடைபெற்ற உலக கிக்பாக்சிங் போட்டியில் தங்கம் வென்ற காஷ்மீர் சிறுமி தாஜ்முல் இஸ்லாம், ஹசீம் மன்சூர் இருவரின் பயிற்சியாளரும் ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது.