கோவிஷீல்டு தடுப்பூசியை வெளிநாடுகளில் தயாரிக்க திட்டம்: SII தலைவர் ஆதர் பூனவல்லா

கடந்த வாரம் சீரம் நிறுவனம் தனது மாத உற்பத்தியை ஜூலை மாதத்திற்குள் 100 மில்லியன் என்ற அளவிற்கு அதிகரிக்கும் என்று கூறியது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 2, 2021, 02:46 PM IST
  • கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • ஆதர் பூனவல்லாவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, அந்நிறுவனத்தின் இயக்குநர் கடிதம் எழுதியிருந்தார்.
கோவிஷீல்டு தடுப்பூசியை வெளிநாடுகளில் தயாரிக்க திட்டம்:  SII தலைவர் ஆதர் பூனவல்லா title=

கொரோனா வைரஸுக்கான (Corona Virus) கோவிஷீல்ட் (Covishield) தடுப்பு மருந்தை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII), பிற நாடுகளில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளது. தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அதன் சப்ளையை அதிகரிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் ஒரு அறிவிப்பு வெளியாகும் என என்று சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவல்லா (Adar Poonawalla) வெள்ளிக்கிழமை ஒரு செய்தி ஊடகத்திடம் கூறியது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் சீரம் நிறுவனம் தனது மாத உற்பத்தியை ஜூலை மாதத்திற்குள் 100 மில்லியன் என்ற அளவிற்கு அதிகரிக்கும் என்று கூறியது.
ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning
https://zeenews.india.com/tamil/health/know-the-prone-positioning-which-...
சீரம் இன்ஸ்டிடியூட்டின் உற்பத்தித் திறனை ஆறு மாதங்களுக்குள் ஆண்டுக்கு 250 கோடி என்ற அளவிலிருந்து 300 கோடி அளவிற்கு உயர்ந்த்தப்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார், எட்டு நாட்களுக்கு முன்பு பிரிட்டன் இந்தியாவில் இருந்து பயணிகளைத் வருவதற்கான தடையை அறிவிக்கும் முன்பு அவர் லண்டனுக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் இந்தியாவில் அதிகரித்துள்ளது.  தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ள நிலையில், நாட்டில் நேற்று முதல், 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி  போடப்படும் என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்ப்பை அடுத்து தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளது.

எனக்கு இந்தியாவில் பலரிடம் இருந்து மிரட்டல்கள் வருகிறது என்பதால், சில காலம் லண்டனிலேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளேன் என சில நாட்களுக்கு முன் சீரம் நிறுவன தலைவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதை அடுத்து, ஆதர் பூனவல்லாவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி  ஏப்ரல் 16-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, அந்நிறுவனத்தின் இயக்குநர் கடிதம் எழுதியிருந்தார். கொரோனா தடுப்பூசி பொருட்கள் தொடர்பாக பூனவல்லாவுக்கு பல்வேறு தரப்பிடம் இருந்து அச்சுறுத்தல்கள்  வருவதாகவும், அதனால், அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ | சீரம் நிறுவனத்தின் CEO அதார் பூனவல்லாவுக்கு "Y" பிரிவு பாதுகாப்பு; காரணம் என்ன

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News