வாயை மூடு, கற்பழித்து விடுவேன்: இளம்பெண்ணை மிரட்டிய டாக்சி டிரைவர் கைது

Last Updated : Jul 7, 2016, 04:19 PM IST
வாயை மூடு, கற்பழித்து விடுவேன்: இளம்பெண்ணை மிரட்டிய டாக்சி டிரைவர் கைது title=

மேற்கு வங்காளத்தில் தனியார் நிறுவன வாடகை காரின் ஓட்டுனர் கற்பழித்து விடுவேன் என மிரட்டியதை அடுத்து இளம்பெண் ஒருவர் ஓடும் காரில் இருந்து வெளியே குதித்து தப்பியுள்ளார்.

சால்ட் லேக் என்ற பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் தனியார் நிறுவன வாடகை கார் ஒன்றை கடந்த திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் பதிவு செய்துள்ளார்.  அதன்பின் தனது நண்பருடன் அதில் பயணித்துள்ளார். காரை சந்து பர்மேனிக் (28) என்பவர் ஓட்டியுள்ளார். அந்த இளம்பெண்ணின் நண்பர் ஆரண்ய பவன் பகுதியில் இறங்கி உள்ளார். உடனே, காரின் ஓட்டுனர் வேகமுடன் காரை ஓட்டியுள்ளார்.  அதன்பின் தேவையில்லாமல் இடது புறம் திரும்பியுள்ளார். இளம்பெண் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மெயின் ரோட்டில் செல்லும்படி அவர் கூறியுள்ளார். இதனை ஏற்று கொண்ட ஓட்டுனர் எப்.டி. பிளாக் என்ற இடம் வரை சென்றுள்ளார். அங்கே மீண்டும் இடதுபுறம் காரை திருப்பியதற்கு இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  இந்த வழியே சென்றால் நேரம் குறையும் என ஓட்டுனர் பதிலளித்துள்ளார். இளம்பெண் இறங்கும் இடம்  வந்த பிறகும் கரை நிறுத்தாமல் ஓட்டுனர் கடந்து சென்று உள்ளார்.  இதனால் எச்சரிக்கை அடைந்த இளம்பெண் காரை நிறுத்தும்படி கூறியுள்ளார். உடனே கோபமுற்ற ஓட்டுனர், இனி பேசினால்  கற்பழித்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன அந்த இளம்பெண் கூச்சலிட்டுள்ளார். ஆனால் அந்த சாலையில் ஆட்கள் யாரும் இல்லாததால் தனியாக இருப்பதை உணர்ந்த இளம்பெண், காரில் இருந்து குதிக்க முடிவு  செய்து உள்ளார்.  இதனை கவனித்த ஓட்டுனர் அந்த பெண்ணை சீட்டில் தள்ளியுள்ளார். அவரை பிடித்து கொள்ள முயற்சித்துள்ளார். அதற்குள் கார் கதவை திறந்து இளம்பெண் வெளியே குதித்துள்ளார். அவரை காரை ஏற்றி நசுக்கி விடுவேன் என ஓட்டுனர் மிரட்டியபடி காரை பின்னே ஓட்டி சென்றுள்ளார். ஆனால் தப்பித்த 

இளம்பெண் மறுநாள் தனியார் கார் நிறுவனம் மற்றும் பீத்தன் நகர் காவல் நிலையம் ஆகியவற்றில் புகார் பதிவு செய்துள்ளார்.  அந்நிறுவனம் ஓட்டுனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதி அளித்தனர்.

ஓட்டுனரை செவ்வாய் கிழமை இரவு பட்டுலி பகுதியில் போலீசார் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர். ஓட்டுனருக்கு 14 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Trending News