கர்நாடக தேர்தல்: மாமரத்தில் காய்த்த ரூ. 1 கோடி... காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் வீட்டில் சிக்கியது!

Karnataka Assembly Election: கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரின் சகோதரரின் வீட்டில் உள்ள மாமரத்தில் இருந்து ரூ. 1 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

Written by - Sudharsan G | Last Updated : May 3, 2023, 03:29 PM IST
  • வரும் மே. 10ஆம் தேதி கர்நாடகாவில் தேர்தல் வாக்குப்பதிவு.
  • மே 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
கர்நாடக தேர்தல்: மாமரத்தில் காய்த்த ரூ. 1 கோடி... காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் வீட்டில் சிக்கியது! title=

Karnataka Assembly Election: சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவில் மரங்களில் இருந்தும், ஆட்டோரிக்ஷாவில் இருந்தும் கோடிக்கணக்கில் ரூபாய் பணம் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சுப்ரமணிய ராய் வீட்டில் வருமான வரித்துறையினர் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். இவர், ராய் புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக்குமார் ராயின் சகோதரர் ஆவார்.

மாமரத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணத்தை அதிகாரிகள் இன்று கைப்பற்றினர். கடந்த சில வாரங்களாக, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு கர்நாடகாவில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ரூ. 1 கோடி கணக்கில் வராத பணத்துடன் 2 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். ஏப்.13ஆம் தேதி சிட்டி மார்க்கெட் பகுதிக்கு அருகில் ஒரு ஆட்டோவில் இருந்து மீட்கப்பட்டது. கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் (எம்சிசி) அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இல்லாமல் பெரிய தொகையை கொண்டு செல்ல அனுமதி இல்லை. 

மேலும் படிக்க | நட்சத்திர பிரச்சாரகர்கள் ‘நாவடக்கத்தை’ கடைபிடிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்

கடந்த மாதம், தனியார் ரியல் எஸ்டேட் டெவலப்பர் அங்கிதா பில்டர்ஸ் அலுவலகம் மற்றும் ஹுப்பள்ளியில் உள்ள அதன் உரிமையாளர் நாராயண் ஆச்சார்யாவின் வீடுகளில் வருமான வரித்துறை குழுக்கள் சோதனை நடத்தினர்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் கங்காதர் கவுடாவின் இரண்டு குடியிருப்பு வளாகங்களிலும், தட்சிண கன்னடாவின் பெல்தங்கடியில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன்பின், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனம் கங்காதர் கவுடாவின் மகன் ரஞ்சன் கவுடாவுக்கு சொந்தமானது. 

2018ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த கவுடா, கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான சீட் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். கர்நாடகாவில் மே 10ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 13ஆம் தேதி வெளியாகும்.

மேலும் படிக்க | பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி சவால்.. திப்பு சுல்தானின் உருவப்படத்தை நீக்க முடியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News