உத்திரப்பிரதேசம் பரேலியில், நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், 40 வயதுடைய விவசாயி, தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருக்கையில், குரங்குகள் கூட்டம் துரத்தியதில், மொட்டை மாடியில் இருந்து விழுந்து இறந்தார். தன்னைத் தாக்கிய குரங்குகளின் கூட்டத்திடமிருந்து தப்பிக்க முயன்றபோது தவறுதலாக மொட்டை மாடியில் இருந்து விழுந்து இறந்தார். இறந்த நபர் முகேஷ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடனடியாக பரேலி நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார்.
“குரங்குகள் தாக்கியதில் முகேஷ் தனது சமநிலையை இழந்தார். மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், அங்கு அவர் காயங்களால் இறந்தார், ”என்று அவரது உறவினர்கள் கூறினர்.
இறந்த நபர் தற்செயலாக மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது குரங்குகளால் தாக்கப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கோட்ட வன அலுவலர் சமீர் குமார் தெரிவித்தார். குரங்கைக் கண்டால் அச்சப்பட வேண்டாம் என அப்பகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு பரிசு, அரசு வெளியிட்டுள்ள பெரிய அறிவிப்பு
உத்திரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் குரங்கு கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ரேபிஸ் தடுப்பூசி போடுவதற்காக 1000-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளுக்கு வந்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் தானா ஷாஹி பகுதியில் குரங்கு கூட்டம் ஒன்று தந்தையின் கையிலிருந்து 4 மாத குழந்தையை பறித்துக்கொண்டு பின்னர் கூரையில் இருந்து கீழே வீசியது. இந்த சம்பவத்தில் 4 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
முன்னதாக, மாவட்டத்தின் ஜகத் கிராமத்தில் குரங்குகள் தாக்கியதில் ஐந்து வயது சிறுவன் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தான். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் நிகில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.இதேபோல், கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி புடானில் வெறித்தனமான குரங்குகளின் கும்பல் தாக்கியதில் ஒருவர் தனது வீட்டின் மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். வனத்துறை அதிகாரிகள் குரங்குகளைப் பிடித்து வனப் பகுதிகளில் விடுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ