Thar Road Viral Video: புதிதாக அமைக்கப்பட்ட சாலையை கிராம மக்கள் தங்கள் வெறும் கைகளாலேயே தூக்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த வினோதமான சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது என ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
38-வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஒரு உள்ளூர் ஒப்பந்தக்காரரால் கட்டப்பட்ட சாலையின் கீழ் நேரடியாக வைக்கப்பட்டுள்ள தார்பாயை போன்ற பொருள் தெரிகிறது. அந்த வீடியோவில், ராணா தாக்கூர் என்று பெயரிடப்பட்ட உள்ளூர் ஒப்பந்தக்காரரின் தரக்குறைவான வேலையை கிராம மக்கள் கேள்விக் கேட்கிறார்கள். தாருக்கு அடியில் தார்பாயை போட்டு, போலியாக சாலையை போட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
When Kaleen Bhaiya ventures into Road construction The contractor made a fake road— with carpet as a base! #Maharashtra #India #Wednesdayvibe pic.twitter.com/6MpHaL5V6x
— Rohit Sharma (@DcWalaDesi) May 31, 2023
இந்த சம்பவம் மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்பாட் தாலுகாவின் ஒரு பகுதியான கர்ஜத்-ஹஸ்ட் போகாரியில் நடந்துள்ளது. இந்த சாலை பிரதமர் கிராமப்புற சாலை திட்டத்தின்கீழ் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | மகிழ்ச்சியில் கர்நாடக மாநில அரசு ஊழியர்கள்! அகவிலைப்படி உயர்வு 31 அல்ல 35%
சாலை அமைப்பதற்கு ஜெர்மன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக ஒப்பந்ததாரர் கூறினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், வீடியோவில் காணப்படுவது போல், தற்காலிக தீர்வு கிராம மக்களால் அம்பலப்படுத்தப்பட்டதால் அது வெற்று வாக்குறுதி என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. உள்ளூர் மக்களும் மகாராஷ்டிர அரசை கடுமையாக விமர்சித்தனர். இதுபோன்ற தரமற்ற பணிக்கு ஒப்புதல் அளித்த பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேக் இன் இந்தியா இணையதளத்தின்படி, 63.32 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள உலகின் இரண்டாவது பெரிய சாலை வலையமைப்பை இந்தியா கொண்டுள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சாலை கட்டுமானத்தை செயல்படுத்த பல்வேறு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொதுப்பணித் துறைகள், தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், எல்லைச் சாலைகள் அமைப்பு மற்றும் இந்திய நெடுஞ்சாலைப் பொறியாளர்கள் அகாடமி (IAHE) உள்ளிட்டவை இதில் அடங்கும்.
வழக்கமான சாலை கட்டுமானத்தில், சரள், மணல் உள்ளிட்டவற்றின் கலவையானது நீடித்து நிலைத்தன்மையை உறுதிப்படுத்த பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், பொறியாளர்கள் சாலையின் நீடித்த தன்மையை அதிகரிக்க கான்கிரீட் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
மேலும் படிக்க | திருமண பரிசுகளில் கருத்தடை பொருள்கள்... கிளம்பிய சர்ச்சை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ