Group Of Wolf Attack In Uttar Pradesh: நம்மூரில் ஊருக்குள் சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் மக்களை தாக்குவதும், குடியிருப்புக்குள் புகுந்த பொருள்களை நாசம் செய்வதையும் நாம் பார்த்திருப்போம். இதனால், பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில்தான் இவை தொடர்ச்சியாக நடைபெறும். காட்டுப்பகுதிகள் ஆக்கிரமிப்பு, தண்ணீர் தட்டுப்பாடு ஆகியவை காரணமாக வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன.
அந்த வகையில், தற்போது உத்தர பிரதேசம் மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மக்கள் கடுமையான உயிர் பயத்தில் வாழந்கு வருகிறார்கள். ஓநாய்களின் தாக்குதலில் சிக்கி கடந்த 45 நாள்களில் மட்டும் 9 பேர் உயிரிழந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இதில் ஒரு பெண் மற்றும் மீதும் 8 பேர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வனத்துறையின் முயற்சிகள்
உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தின் மஹ்ஸி பகுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது. அப்பகுதியில் யானை சாணத்தையும், அதன் சிறுநீரையும் பயன்படுத்தி ஓநாய் கூட்டத்தை குடியிருப்பு பகுதிகளில் இருந்து விரட்ட வனத்துறை முயற்சித்து வருகிறது.
மேலும், அந்த பகுதியில் இருந்து ஓநாய்களை விரட்ட Operation Bhediya என்ற செயல்திட்டத்தை முடுக்கிவிட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மீண்டும் அமைதியை நிலைநாட்டு அரசு தரப்பும் முயற்சித்து வருகிறது. உத்தர பிரதேசத்தின் தலைமை வனவிலங்கு காப்பாளர் இதுகுறித்து பேசும்போது, வனப்பகுதிகள் முழுவதிலும் ட்ரோன் கேமராக்கள், தெர்மல் ட்ரோன் மேப்பிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஓநாய்களை கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்றார்.
VIDEO | Police and forest department team nabbed a wolf in UP's #Bahrainch, earlier today.
The Uttar Pradesh government had launched 'Operation Bhediya' to capture a pack of wolves on the prowl in Mehsi tehsil in Bahraich district that has so far killed seven people.
Six… pic.twitter.com/Nx5ZKFAT1e
— Press Trust of India (@PTI_News) August 29, 2024
பாதிக்கப்பட்ட தாய்மார்களின் கதறல்
இந்நிலையில், ஓநாய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் ஊடகம் ஒன்றிடம் அளித்த பேட்டியில் பல பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், ஓநாய் தாக்குதலுக்கு உள்ளான பிரோஸ் என்ற சிறுவனின் தாயார் கூறியவை கேட்கும்போது அச்சத்திற்குள் ஆழ்த்தியது.
"ஓநாய் ஒன்று இரவில் வீட்டுக்குள் நுழைந்து, எனது குழந்தையை கழுத்தை கவிக்கொண்டு வெளியே தப்பித்து ஓடியது. நான் அந்த ஓநாயின் காலை பிடித்து எனது பிள்ளையை காப்பாற்ற எவ்வளவோ முயன்றேன். ஆனால் என்னால் முடியவில்லை. எங்கள் வீட்டில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இருக்கும் வயல் பகுதிகளுக்குள் எனது மகனை அது கவ்விக்கொண்டு சென்றது. நான் எச்சரிக்கை ஒலி எழுப்பினேன். ஊர் மக்கள் ஒன்று திரண்டனர்.
பின்னர் வயல்வெளியில் தேடியபோது ஓநாயை எனது பிள்ளையை பயங்கர காயங்களுடன் விட்டுச்சென்றிருந்தது. உடனே அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். 13 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு தற்போது அவன் நலமுடன் உள்ளான்" என்றார் அந்த தாய். மேலும், ஓநாய் தாக்குதலால் பிராஸின் முகத்தில், கழுத்தில், தலையில், காதுகளில் இருந்த காயங்களையும் அவர் அந்த ஊடகக் குழுவிடம் காண்பித்துள்ளார்.
பிரோஸை போல் ராகுல் என்ற சிறுவனும் ஓநாய் தாக்குதலில் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டான். அவனின் தாயாரும் அந்த கோர சம்பவத்தை விவரித்தார். வீட்டிற்குள் நுழைந்து ஓநாய் ராகுலை தாக்கியுள்ளது. மேலும் தொடர்ந்த ராகுலின் தாயார்,"ராகுலின் மாமா ஒருவர் வயலில் இருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது ராகுலின் கதறல் சத்தம் கேட்கவே, உடனே அவனை காப்பாற்ற ஓடி வந்தான். ஓநாய் தாக்குதலில் அவன் பலத்த காயமடைந்தான். தொடர் சிகிச்சைக்கு பின் அவர் உயிர்பிழைத்தான்" என்றான்.
உறுதுணையாக நிற்கும் எம்எல்ஏ
இதுபோன்ற தொடர் ஓநாய் தாக்குதலை தொடர்ந்து வேறு யாரையும் நம்பாமல் தங்கள் ஊருக்கு தாங்களே பாதுகாப்பு என்ற பாணியில் ஊர் மக்கள் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு ஓநாய்களை கண்டறிய திட்டமிட்டனர். ஊர் மக்களுக்கு உள்ளூர் எம்எல்ஏவான சுரேஷ்வர் சிங்கும் உறுதுணையாக செயல்பட்டார்.
சுரேஷ்வர் சிங் ஊடகத்திடம் கூறுகையில்,"நீங்கள் பார்த்தீர்கள் ஆனால் இரண்டு, மூன்று ஓநாய்கள் இல்லை, அந்த கூட்டத்தில் நிறைய ஓநாய்கள் உள்ளன. வனத்துறையினரால் இதுவரை மூன்று ஓநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. அனைத்து ஓநாய்களும் பிடிப்படாத வரை மக்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கி வருவோம் என எனது மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ