லக்னோ / மீரட்: ஒரு குறிப்பிடத்தக்க எதிர் உளவு நடவடிக்கையில், லக்னோவை தளமாகக் கொண்ட இராணுவ புலனாய்வு (MI) பிரிவு வழங்கிய உள்ளீடுகளைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்தின் பயங்கரவாத தடுப்புப் படை (ATS) ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சிக்னல்மேன் சௌரப் சர்மாவை கைது செய்தது.
முன்னாள் படைவீரரான இவர் 2016 முதல் கராச்சியைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவுத்துறை நிறுவனத்திற்காக பணிபுரிந்து வந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 2020 இல், சிக்னல்மேன் சௌரப் சர்மா (ஓய்வு) நாட்டுக்கு எதிரான உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் குறிக்கும் உள்ளீடுகளை MI அதிகாரிகள் பெற்றனர். இந்த உள்ளீடுகள் "ஆபரேஷன் கிராஸ்-கனெக்ஷன்” என்ற குறியீட்டுப் பெயரில் விரிவான கண்காணிப்புத் திட்டமாக உருவாக்கப்பட்டன. இதன் விவரங்கள் டிசம்பர் தொடக்கத்தில் உத்தர பிரதேச (Uttar Pradesh) பயங்கரவாத எதிர்ப்புப் படையுடன் பகிரப்பட்டு கூட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
ஒரு மாதமாக இந்த உள்ளீடுகளின் அடிப்படையில் பணிபுரிந்த பின்னர், ஹப்பூர் மாவட்ட கிராமமான பிஹுனியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் இருந்து சிக்னல்மேன் சௌரப் சர்மாவை UP ATS இன்று கைது செய்தது.
சிக்னல்மேன் சௌரப் சர்மா, பாகிஸ்தான் உளவுத்துறையுடனான தனது தொடர்பை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் 2014 இல் பேஸ்புக்கில் ஒரு பாகிஸ்தான் (Pakistan) புலனாய்வு இயக்க நபருடன் (PIO) தொடர்பு கொண்டதையும் வெளிப்படுத்தினார்.
ஆரம்பத்தில், அந்த பெண் PIO ஒரு பாதுகாப்பு பத்திரிகையாளராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ஆனால் பின்னர் 2016-க்குள் பணம் அளித்து முக்கியமான இராணுவ தகவல்களைப் பெறத் தொடங்கினார். சௌரப் சர்மா இந்த தகவல்களை, டெக்ஸ்ட் மெசேஜுகள், ஆடியோ மற்றும் புகைப்பட செய்திகள் மூலமாகவும், ஃபோன் கால்கள் மூலமாகவும், பெரும்பாலும் Whatsapp மூலம் அவருக்கு அனுப்பியுள்ளார். அவருக்கு இவற்றிற்கு பதிலாக பலமுறை பணம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ALSO READ: 6 மாதத்தில் ₹82 லட்சத்துக்கு பெட்ஷீட்டும், டிவியும் வாங்கிய முதலமைச்சர் யார்?
சௌரப் சர்மா 2020 ஜூன் மாதம் உடல்நலனைக் காரணம் காட்டி ராணுவத்தில் (Indian Army) இருந்து ஓய்வு பெற்றார். அவரது மொபைல் போனில் அவரது செயல்பாடுகளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட சௌரப் சர்மாவுக்கு எதிராக லக்னோவில் உள்ள கோமதி நகர் காவல் நிலையத்தில் IPC-யின் 120B, 123 ஆகிய பிரிவுகளிலும், அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் (OSA) 3,4,5 மற்றும் 9 ஆம் பிரிவுகளிலும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) 13 வது பிரிவிலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். விசாரணையை முன்னெடுத்துச் செல்ல குற்றம் சாட்டப்பட்டவரின் போலிஸ் கஸ்டடியை உ.பி ஏடிஎஸ் கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ (Lucknow) MI, UP ATS மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
ALSO READ: இலங்கைவாழ் தமிழர்கள் குறித்த ஜெய்ஷங்கரின் கருத்தை வரவேற்கிறேன்: Banwarilal Purohit
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR