இணைய நிறுவனங்களை நிறுவிய இந்தியாவின் ஆரம்பகால தொழில்நுட்ப முதலாளிகளில் ஒருவரான அனுபம் மிட்டல், கூகுள் சட்டவிரோத பில்லிங் முறையைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் ஆல்பாபெட் நிறுவனத்தை 'டிஜிட்டல் ஈஸ்ட் இந்தியா கம்பெனி' என்று அழைத்த அவர், இந்த விவகாரத்தை பிரதமர் அலுவலகம் கவனிக்கும் என்று நம்புவதாக அனுபம் மிட்டல் தெரிவித்தார்.
இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட அனுபம் மிட்டல், "இந்திய டெவலப்பர்களுக்கு அவர்களின் பணம் செலுத்துவது கட்டாயம் என்று கூகுள் கூறுகிறது. இது இந்திய சட்டங்களை மீறுவதாகும். இதை, பிரதமர் அலுவலகம் கவனிக்கும் என்று நம்புகிறேன். இது நவீன டிஜிட்டல் கிழக்கிந்திய நிறுவனம்" என்று தெரிவித்தார்.
Startups are lobbying the govt to increase threshold for angel tax? The question is why an Angel ‘tax’? You don’t destroy the produce to catch a few bad apples … u develop capabilities to spot them … let’s ask for Angel ‘subsidy’ given future impact @FinMinIndia
— Anupam Mittal (@AnupamMittal) April 25, 2023
கூகுளின் கொள்கை சமீபத்தில் மாற்றப்பட்டது. Google மாற்று பில்லிங் முறையைத் தேர்வுசெய்தால் சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படும், ஆனால் அது நிலையான கட்டணத்தை விட நான்கு சதவீதம் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய போட்டி ஆணையத்தின் (Competition Commission of India (CCI) ) உத்தரவை கூகுள் மீறுவதாகவும், மாற்று பில்லிங் முறையைத் தேர்வுசெய்த ஆப் டெவலப்பர்களிடமிருந்து 11-26 சதவிகிதம் வரை கமிஷன்களை வசூலித்ததாகவும் அனுபம் மிட்டல் குற்றம் சாட்டுகிறார். அலையன்ஸ் ஆஃப் டிஜிட்டல் இந்தியா அறக்கட்டளை (ADIF), CCI உள்ளிட்ட அதிகாரிகளை இந்த விஷயத்தை ஆராய்ந்து, கூகுள் இந்த உத்தரவை முழுமையாக கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
கூகுள் ப்ளேயில் விநியோகிக்கப்படும் டிஜிட்டல் பொருட்கள் மற்றும் சேவைகளை செயலிகள் மூலம் வாங்கும் டெவலப்பர்களுக்கு கூகுள் ப்ளேயின் பில்லிங் அமைப்பு தேவை. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களுடன் எளிதாகப் பரிவர்த்தனை செய்ய இது வாடிக்கையாளர்களை இந்த பில்லிங் முறை அனுமதிக்கிறது
மேலும் படிக்க | கேரளாவில் உள்ள கிறிஸ்தவ மத தலைவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ