287 புள்ளிகள் வரை கடும் வீழ்ச்சியை கண்ட இந்திய பங்குசந்தை...

துவக்கத்திலேயே இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது! சென்செக்ஸ் 287 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவுகண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது...

Last Updated : Dec 26, 2018, 10:01 AM IST
287 புள்ளிகள் வரை கடும் வீழ்ச்சியை கண்ட இந்திய பங்குசந்தை... title=

துவக்கத்திலேயே இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது! சென்செக்ஸ் 287 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவுகண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது...

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போதே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 287 புள்ளிகள் சரிவுடன் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 359.17 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 35,096.65 புள்ளிகளாக சரிந்தது. 

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி பொறுத்தமட்டில் 111.75 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 10,553.25 புள்ளிகளாக குறைந்தது. 

சென்செக்சில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில் கோல் இந்தியா, மாருதி சுசுகி ஆகிய இரு நிறுவனங்களை தவிர அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் விலை சரிவுடனே காணப்பட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்டீரிஸ், பார்தி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் பங்குகள் 3% அதிகமாக சரிவுடன் காணப்பட்டது. 

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க பங்குச்சந்தை 2%-க்கும் அதிகமாக சரிவடைந்து காணப்பட்டது. இந்த சரிவும் இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்பத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்ளும் இன்றைய பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன.

 

Trending News