ஜம்மு காஷ்மீரில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது பற்றி 7 நாளில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டதற்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 3 நீதிபதிகள் அமர்வு விசாரத்து வந்தது. இன்று வழக்கு விசாரணையின் போது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதற்கு எதிரான வழக்குகளின் விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் அறிவித்தார்.
மேலும், ஜம்மு-காஷ்மீரில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பட்டது குறித்து 7 நாட்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சீதாராம் யெச்சூரி தங்களது கட்சி நிர்வாகியான யூசுப் தரிகாமியை நண்பராக சந்திக்கலாம் என்றும் முகமது ஜலீல் உள்ளிட்டோரும் தங்களது உறவினர்களை சந்திக்கலாம் எனகூறி, அவர்கள் காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. நாட்டு மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் தொடர்பு கொள்வது அவசியம் என கருத்து தெரிவித்த நீதிமன்றம், உறவினர்கள், நண்பர்களை மட்டும் தான் சந்திக்க வேண்டும் என்றும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட கூடாது எனவும் அறிவுறுத்தியது.