ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) 2020 டிசம்பர் 24, இன்று 2020 எஸ்பிஐ கிளார்க் மெயின்ஸ் முடிவுகளை அறிவித்துள்ளது. இதன் முடிவை எஸ்பிஐ அதிகாரப்பூர்வ தளம் மூலம் sbi.co.in இல் சரிபார்க்கலாம். முக்கிய தேர்வு 2020 அக்டோபர் 31 முதல் நவம்பர் 7, 2020 வரை நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) இந்த தேர்வுகளின் முடிவு டிசம்பர் இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. முடிவைச் சரிபார்க்க, மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
எஸ்பிஐ கிளார்க் மெயின்ஸ் முடிவு 2020: தெரிந்து கொள்வது எப்படி...
1. மாணவர்கள் எஸ்.பி.ஐ.(SBI) யின் அதிகாரப்பூர்வ தளமான, sbi.co.in அல்லது sbi.co.in/careers என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும்
2. முகப்பு பக்கத்தில் இருக்கும் எஸ்பிஐ கிளார்க் மெயின்ஸ் ரிசல்ட் 2020 இணைப்பைக் கிளிக் செய்க.
3. மாணவர்கள் லாக் இன் தகவல்களை உள்ளிட்ட பின் புதிய பக்கம் தோன்றும்.
4. உங்கள் முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும்.
5. முடிவை சரிபார்த்து பதிவிறக்கவும்.
6. வருங்கால தேவைக்ககாக அதன் ஹார்ட் காபியை, அதாவதுபிரிண்ட் எடுத்து வைத்திருங்கள்.
நாடு முழுவதும் வங்கியில் காலியாக உள்ள 8134 பதவிகளை நிரப்ப எஸ்பிஐ கிளார்க் தேர்வு (SBI Clerk Exam) 2020 நடத்தப்பட்டது. பிரிலிம்ஸ் தேர்வு முடிவு 2020 அக்டோபர் 20 அன்று அறிவிக்கப்பட்டது. மேலும் தொடர்புடைய விவரங்களை சரிபார்க்க விரும்பும் மாணவர்கள் எஸ்பிஐ அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடலாம்.
ALSO READ | PFI வங்கிக் கணக்குகளில் ₹100 கோடிக்கும் மேல் முதலீடு: அமலாக்கத் துறை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR