உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அனுமான் ஒரு தலித் தெய்வம் என்று கூறிய கருத்து மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது சுவாரஸ்யமான திருப்பமாக, நேற்று (வியாழக்கிழமை) பிஜேபி கட்சியின் ஊழியர் எம்.எல்.சி. பக்கல் நவாப்பும் அனுமான் "உண்மையில் ஒரு முஸ்லிம்" எனக் கூறி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளார்.
இதுக்குறித்து பிஜேபி எம்.எல்.சி. பக்கல் நவாப் கூறியது, என்னோட கருத்துப்படி இந்து கடவுளான அனுமான் ஒரு முஸ்லிமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாமியரின் பெயர்கள் வரிசையில் தான் கடவுள் அனுமான் ஜி பெயரும் வருகிறது. அதாவது ரகுமான், ரம்ஜான், பர்மான், ஜிசான், குர்பான் போன்ற பெயர்கள் இஸ்லாமிய மதத்தில் தான் சூட்டப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் அனுமான் என்ற பெயர் வந்திருக்கும். அதனால் தான் அனுமான் என்ற பெயரில் எந்த இந்துக்களும் தங்களுக்கு பெயர் வைத்துக்கொள்வதில்லை எனவும் கூறியுள்ளார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. கடவுளை வைத்து பஜகவினர் அரசியல் செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாற்று எழுந்துள்ளது.