பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 3 ஆம் நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது...!
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 3 ஆம் நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 61 வயதான நடிகர் விரைவில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் என்று கூறப்படுகிறது.
சேகர் சுமனின் மகன் அடயன் சுமன் செவ்வாயன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்: "சஞ்சு ஐயா நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் :( #sanjaydutt விரைவில் குணமடைவார், இந்த ஆண்டு ஏன் இதை செய்கிறீர்கள்?" என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Sanju sir diagnosed with lung cancer :( #sanjaydutt get well soon sir this year why u doing this ?
— adhyayan summan (@AdhyayanSsuman) August 11, 2020
முன்னதாக, நடிகர் சஞ்சய் தத் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், 'ஹாய் நண்பர்களே, நான் சில மருத்துவ சிகிச்சைக்காக வேலையில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். எனது நலம் விரும்பிகள் கவலைப்படவேண்டாம் அல்லது தேவையில்லாமல் சிந்திக்க வேண்டாம். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துக்களுடன், நான் விரைவில் நலமுடன் திரும்புவேன்' என அந்த பதிவில் கூறியிருந்தார்.
ஆதாரங்களின்படி, அவர் சமீபத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அவர் கொரோனா வைரஸுக்காகவும் பரிசோதிக்கப்பட்டார், அந்த அறிக்கை எதிர்மறையானது. பின்னர், அவருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து (ஆகஸ்ட் 10) வெளியேற்றப்பட்டார். அவர் புதன்கிழமை சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு செல்கிறார்.