வானிலையில் சற்று மாற்றம்.....டெல்லி, என்.சி.ஆரில் பலத்த மழை, புழுதிப் புயல்....

டெல்லி-என்.சி.ஆர் ஞாயிற்றுக்கிழமை வானிலை திடீரென மாறியது, நகரின் பல பகுதிகளில் பெரும் புழுதி புயல் மற்றும் மழை பெய்தது.

Last Updated : May 10, 2020, 12:25 PM IST
வானிலையில் சற்று மாற்றம்.....டெல்லி, என்.சி.ஆரில் பலத்த மழை, புழுதிப் புயல்.... title=

புது டெல்லி: டெல்லி-என்.சி.ஆர் ஞாயிற்றுக்கிழமை வானிலை திடீரென மாறியது, நகரின் பல பகுதிகளில் பெரும் புழுதி புயல் மற்றும் மழை பெய்தது.  இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வரும் நிலையில் சற்று வெப்பநிலை குறைந்துள்ளது. 

டெல்லி மற்றும் நொய்டா பகுதி முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பலத்த புழுதிப் புயல் காற்று வீசியது. தீடிர் மோசமான வானிலை காரணமாக டெல்லியில் குறைந்த தெரிவுநிலை காணப்பட்டுள்ளது. புழுதிப் புயலைத் தொடர்ந்து மழை காரணமாக வெப்பநிலையும் சரிந்தது. மேற்கு டெல்லியின் மையப்பகுதியில் உள்ள ராஜோரி கார்டன் வரை நொய்டாவிலிருந்து நீடிக்கும் பகுதிகளில் வானிலை மாற்றம் காணப்படுகிறது.

டெல்லி-என்.சி.ஆர் வெப்பநிலையில் 37 டிகிரி செல்சியஸாக குறைந்தது. டெல்லி 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலையைப் பதிவுசெய்து வெப்ப அலைகளை உணர்ந்த ஒரு வாரத்திற்குப் பிறகு வெப்பநிலை மாற்றம் வருகிறது. இருப்பினும், டெல்லி-என்.சி.ஆர் பிராந்தியத்தில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

அண்டை மாநிலத்தில் வானிலை நிலை, ஹரியானா, சண்டிகர் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். உத்தரகண்ட் மற்றும் தெலுங்கானா ஆகியவை ஒரே வானிலை நிலையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. இது தவிர, ஜம்மு-காஷ்மீர், லடாக், கில்கிட்-பால்டிஸ்தான், முசாபராபாத், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் புழுதிப் புயலைக் காணலாம்.

Trending News