சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் 14 ஆம் தேதி தீர்ப்பு!!

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 14 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!!

Last Updated : Mar 12, 2019, 09:33 AM IST
சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் 14 ஆம் தேதி தீர்ப்பு!! title=

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 14 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!!

கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் டெல்லியில் இருந்து லாகூர் சென்ற சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அபிநவ் பாரத் என்ற அமைப்பின் உறுப்பினரும், சாமியாருமான அசீமானந்த், லோகேஷ் சர்மா, ராஜேந்தர் சவுத்ரி உள்ளிட்ட 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் சாமியார் அசீமானந்த் மற்றும் லோகேஷ் சர்மா கைது செய்யப்பட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுனில் ஜோஷி திடீரென மரணமடைந்தார்.

இந்த வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்தது. இவர்கள் மீதான வழக்கு விசாரணை, ஹரியானாவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இறுதி விசாரணை முடிவடைந்து. தீர்ப்பை மார்ச், 11 ஆம் நீதிபதி ஒத்திவைத்தார். இந்நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. திடீரென, பாகிஸ்தானை சேர்ந்த ராஹிலா எல்.வகீல் என்ற பெண் சார்பில், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், இந்த வழக்கு தொடர்பாக, தன்னிடம் சில முக்கிய ஆதாரங்கள் இருப்பதாக, அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, சிறப்பு நீதிபதி, ஜக்தீப் சிங், வழக்கின் தீர்ப்பை நிறுத்தி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வழக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending News