பஞ்சாப் நேஷனல் வங்கி அடுத்து, நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முறைகேடு செய்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநில நிமச் பகுதியில் வகிக்கும் சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) நடைபெற்றுள்ள முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து உள்ளார்.
அதாவது முதல் அரையாண்டில் வங்கியில் நடைபெற்ற மொத்த 1,329 மோசடி புகார்கள் வந்தது. அதில் சுமார் ரூ. 5555,48 கோடி முறைகேடு நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை) ரூ 723.06 கோடி வங்கி மோசடி செய்துள்ளதாக 669 புகார்கள் வந்துள்ளன.
எஸ்.பி.ஐ., நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், வங்கியில் சுமார் 660 ரூ. 4832.42 கோடி முறைக்கேடு நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.