ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் தடை- ஏ.டி.எம், டிடி எப்படி பயன்படுத்துவது

Last Updated : Nov 9, 2016, 12:26 PM IST
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் தடை- ஏ.டி.எம், டிடி எப்படி பயன்படுத்துவது title=

பிரதமர் மோடி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார். கருப்பு பணத்துக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை நேற்று அவர் அறிவித்தார். கருப்பு பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் புதிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிள்ளது என்று மோடி கூறியுள்ளார்.

அதன்படி, 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் நேற்று நள்ளிரவிலிருந்து செல்லாது. 

ஏ.டி.எம்.,கள் இயங்காது:-

நவம்பர் 9-ம் தேதி எந்த வங்கிகளும் செயல்படாது. நவம்பர் 9-ம் மற்றும் 10-ம் தேதி அனைத்து ஏ.டி.எம்.களும் இயங்காது. தொடக்கத்தில் சில நாட்களுக்கு ஏ.டி.எம்.மில் கார்டு மூலம் 2௦௦௦ ரூபாய் வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படும். பின்னர், இத்தொகை 4௦௦௦ ரூபாயாக உயர்த்தப்படும்.

டிமாண்ட் டிராப்ட, காசோலை பணம்:-

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, காசோலை, டிமாண்ட் டிராப்ட், நெட் பேங்கிங், மின்னணு பண பரிவர்த்தனை போன்ற வழிகளில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டுப் பாடும் கிடையாது.

Trending News