பெங்களூரு: கர்நாடகாவின் சன்னபட்னா நகரத்தைச் சேர்ந்த ஒரு பூ விற்பனையாளர் தனது மனைவியின் வங்கிக் கணக்கில் ரூ .30 கோடி இருப்பதை அறிந்ததும் பெரும் அதிர்ச்சியடைந்தார். சயீத் மாலிக் புர்ஹான் என்ற நபரின் குடும்பத்தின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய நிதி நெருக்கடியில் இருந்த போது, இந்த சம்பவம் நடந்துள்ளது.
வங்கியில் ரூ .30 கோடி இருப்பதை அடுத்து டிசம்பர் 2 ஆம் தேதி வங்கி அதிகாரிகள் அவரது வீட்டின் கதவைத் தட்டியதாகவும், அத்தகைய தொகை அவரது கணக்கில் எவ்வாறு வந்தது என்பதை விளக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுக்குறித்து புர்ஹான் கூறுகையில், டிசம்பர் 2 ஆம் தேதி அவர் எங்கள் வீட்டைத் தேட வந்தார். அவர்கள் சொன்னது என்னவென்றால், எனது மனைவியின் (ரெஹானா) கணக்கில் ஒரு பெரிய தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதனால் மனைவியை கூட்டிக்கொண்டு ஆதார் அட்டையுடன் வங்கிக்கு வரும்படி அதிகாரிகள் கூறியதாகக் கூறினார்கள் என்றார்.
மேலும் வங்கி ஊழியர்கள் ஒரு ஆவணத்தில் தன்னை கையெழுத்திட சொன்னதாகவும், அதற்காக தனக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்ததாகவும் கூறினார். ஆனால் கையெழுத்திட மறுத்து விட்டேன் எனக் கூறினார்.
ஒருமுறை ஆன்லைன் போர்ட்டல் மூலம் புடவையை வாங்கியதை நினைவு கூர்ந்த புர்ஹான், அப்பொழுது எனக்கு கார் பரிசாக விழுந்துள்ளது எனக்கூறி எனக்கு போன் செய்து எனது வங்கி விவரங்கள் கேட்கப்பட்டது. அதன்பிறகு எங்கள் கணக்கில் பணம் எப்பொழுது வரும் என்று நாங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டு இருந்தோம் என்று அவர் கூறினார்.
எங்கள் கணக்கில் 60 ரூபாய் மட்டுமே இருந்தது. ஆனால் திடீரென்று இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதன்பிறகு வருமான வரித்துறையிடம் புகார் அளித்ததாக புர்ஹான் கூறினார். ஆரம்பத்தில் வருமான வரித்துறையினர் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று அவர் கூறுகிறார்.
அதன்பிறகு புகாரின் அடிப்படையில், ராம்நகர் மாவட்டம் சன்னபட்னா நகர காவல்துறையினர் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஐபிசியின் கீழ் மோசடி மற்றும் மோசடி வழக்குகளை பதிவு செய்தனர்.
போலிசாரின் கூற்றுப்படி, அவரது கணக்கில் பல முறை நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு உள்ளது. இது பற்றி புர்ஹானுக்கு தெரியாது. இந்த பரிவர்த்தனைகள் எந்த நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்பதை நாங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். இதன் பின்னணியில் இருப்பவர்களை நாங்கள் கைது செய்வோம் என்று கூறினார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.