இந்தியாவின் 3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்!
பிகார், ஹரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிரப்பித்துள்ளார். 4 மாநிலங்களின் ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவின் படி பிகார மாநில ஆளுநராக லால் ஜி டாண், ஹரியானா மாநில ஆளுநராக சத்யதேவ் நாராயண் ஆர்யா, உத்தரகாண்ட் மாநில ஆளுநராக பேபி ராணி மவுரியா நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிகார் மாநிலத்தின் ஆளுநராக பதவி வகிக்கும் சத்யபால் மாலிக், ஜம்மு-காஷ்மிர் மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேப்போல் மேகாலயா ஆளுநர் கங்கா பிரசாத், சிக்கிம் ஆளுநராகவும், திரிபுரா ஆளுநர் தத்தகதா ராய், மேகாலயா ஆளுநராகவும், ஹரியானா ஆளுநர் கப்தன் சிங் சோலாங்கி திரிபுரா மாநில ஆளுநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்தாண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளுநர்களின் இந்த திடீர் இடமாற்றம் முக்கியதுவம் வாய்ந்த விசயமாக பார்க்கப்படுகிறது.