மும்பை: முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி மற்றும் என்கோர் ஹெல்த்கேர் தலைமை நிர்வாக அதிகாரி வீரேன் மெர்சன்ட்-ன் மகளான ராதிகா மெர்சண்ட் இருவருக்கும் நேற்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஏற்கனவே ஆனந்த் அம்பானிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக திருமண உறுதி வைபவம் நடைபெற்றது ஏன் என்ற கேள்விகளும், அதற்கான பதில்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.
இரண்டாவது முறை நிச்சயதார்த்தம் ஏன்?
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரக் குடும்பங்கள் என்பதால், தங்கள் செல்வாக்கையும் ஆடம்பரத்தையும் காட்டுவதற்காக இப்படி செய்யலாமா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் உண்மையில், டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் இரு குடும்பத்தின் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
ஸ்ரீநாத்ஜி கோவிலில் நிச்சயதார்த்தம்
வீரேன் மெர்சன்ட் குடும்ப வழக்கத்தின்படி, திருமண நிச்சயதார்த்தம் எனப்படும் ‘ரோகா’ என அழைக்கப்படும் சடங்கு ராஜாஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது இரு குடும்பத்தினரும் ஆலயத்தில் மிகவும் எளிமையாக நிச்சயதார்த்தத்தை நடத்தி குடும்ப விழாவாக முடித்துக் கொண்டனர்.
மேலும் படிக்க | ஸ்ரீநாத்ஜி கோவிலின் ஒற்றை அரிசியை வீட்டில் வைத்தால் நீங்கள் பில்லியனர்
மும்பையில் நிச்சயதார்த்த விழா
எனவே, நேற்று முகேஷ் அம்பானி குடும்ப வழக்கத்தின்படி நிச்சயதார்த்த விழா மும்பையில் நடந்தது. இந்தியாவிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு என்று சொல்லப்படும் முகேஷ் அம்பானியின் நவீன அரண்மனையான அண்டிலியாவில் நேற்று பிரம்மாண்டமான விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
மும்பையில் முகேஷ் அம்பானியின் அண்டிலியா வீட்டில் பிரம்மாண்டமாக அதிகாரப்பூர்வ நிச்சயதார்த்த விழா நடந்தது.
நிச்சயதார்த்த விழாவில் முகேஷ் அம்பானி - வீரேன் மெர்ச்சன்ட் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்-ன் மகளான ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்கு திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது.
ஆனந்த அம்பானி
அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு, தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிரீன் எனர்ஜி வர்த்தகத்தை வழிநடத்துகிறார் ஆனந்த் அம்பானி. அதோடு, ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்கள் ஆகிய ரிலையன்ஸின் இணை நிறுவனங்களின் பல துணை நிறுவனங்களில் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
ராதிகா மெர்ச்சன்ட்
என்கோர் ஹெல்த்கேர் சிஇஓ வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகளான ராதிகா மெர்ச்சன்ட், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்று, என்கோர் ஹெல்த்கேரின் வாரிய இயக்குநராக உள்ளார்.
மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ