அரசுக்கு RBI ₹ 1 முதல் ₹ 3 லட்சம் கோடி வரை வழங்கலாம்: BofAML

மத்திய அரசுக்கு 1 லட்சம் கோடி முதல் 3 லட்சம் கோடி வரை ரிசர்வ் வங்கி வழங்கலாம் என அமெரிக்காவின் மெர்ரில் லிஞ்ச் வங்கி தெரிவித்துள்ளனது! 

Last Updated : Nov 27, 2018, 10:30 AM IST
அரசுக்கு RBI ₹ 1 முதல் ₹ 3 லட்சம் கோடி வரை வழங்கலாம்: BofAML title=

மத்திய அரசுக்கு 1 லட்சம் கோடி முதல் 3 லட்சம் கோடி வரை ரிசர்வ் வங்கி வழங்கலாம் என அமெரிக்காவின் மெர்ரில் லிஞ்ச் வங்கி தெரிவித்துள்ளனது! 

ரிசர்வ் வங்கி, ஒரு லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3 லட்சம் கோடி ரூபாய்க்குள் மத்திய அரசுக்கு வழங்கலாம் என பேங்க் ஆப் இந்தியா மெரில் லின்ச் என்ற முதலீட்டு வங்கி கணித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்திலும், தன்னாட்சி அதிகாரத்திலும் மத்திய BJP அரசு தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது. ரிசர்வ் வங்கியை கைப்பற்றி, அதன் வசம் உள்ள உபரி மூலதனத்தை கட்டுக்குள் கொண்டுவர மோடி அரசு முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. நிதிப்பற்றாக்குறை நெருக்கடியில் உள்ள மத்திய அரசு, தேர்தல் வர இருப்பதால் திட்டச்செலவுகளை அதிகரிக்க எண்ணுவதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார். 

இதை தொடர்ந்து பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில், பேங்க் ஆப் இந்தியா மெரில் லின்ச் என்ற முதலீட்டு வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த அறிக்கையில், இந்தியாவின் ஜிடிபியில் அரை சதவீதம் முதல் ஒன்றரை சதவீதம் வரையிலான நிதிக்கு இது சமமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமாகவே ரிசர்வ் வங்கியிடம் மூலதனம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கிடயிடம் உபரியாக உள்ள நிதியில் இருந்து இயல்புக்கு மாறாக கூடுதல் தொகையை எதிர்பார்ப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து விட்ட நிலையில், ரிசர்வ் வங்கிக்கு கையிருப்பாக எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை மதிப்பிடுவதற்கு மத்திய அரசுடன் இணைந்து சிறப்பு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending News