பலாத்கார செய்யப்பட்ட பெண்ணை தீ வைத்து எரித்த நயவஞ்சகர்கள்!

ஐதராபாத்தில் நடத்த பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பிறகு, சிறுமியை உயிருடன் எரித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Dec 5, 2019, 03:43 PM IST
பலாத்கார செய்யப்பட்ட பெண்ணை தீ வைத்து எரித்த நயவஞ்சகர்கள்! title=

ஐதராபாத்தில் நடத்த பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பிறகு, சிறுமியை உயிருடன் எரித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு வெளியே வயல்வெளிக்கு சென்ற இளம் பெண்ணை 5 நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தினர். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த இளம்பெண் தற்போது உயிருக்கு போராடி வருகிறார். இவர் மேல் சிகிச்சைக்காக லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். 

பாதிக்கப்பட்ட அதே பெண் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர். இது குறித்து ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் அவர் புகார் அளித்துள்ளதாக போலீசார் கூறியிருந்தனர். மேலும் அவரை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தான் தீயிட்டு கொளுத்தியுள்ளனர் எனவும் அந்த 5 பேரில் 3 பேரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐதராபாத்தில் கால்நடைத்துறை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், கோயம்புத்தூரில் பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நிர்பயா சம்பவம் என இது போன்று பல சம்பவங்கள் உள்ளன. ஆனால் இது போன்று பல கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவங்களுக்குப் பிறகும், குற்றவாளிகள் சிந்தனை மேம்படவில்லை.  இதை சரியான நேரத்தில் தடுக்காவிட்டால் அது சமூக சீர்கேடாக மாறும்.

Trending News