அயோத்தியில் ராமர் கோயில்: கட்டுமான பொறுப்பை ஏற்கும் 15 உறுப்பினர்கள்..

ராமர் கோயில் அறக்கட்டளை பட்டியலில் 15 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தான் அயோத்தியில் கோயில் கட்டுவதைக் குறித்து ஆலோசனை செய்வார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 5, 2020, 08:38 PM IST
அயோத்தியில் ராமர் கோயில்: கட்டுமான பொறுப்பை ஏற்கும் 15 உறுப்பினர்கள்.. title=

அயோத்தி: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ராமர் கோயில் கட்டுவது தொடர்பான முழுமையான திட்டம் குறித்து விவரித்தார். ராமர் கோயிலுக்கு கட்டப்படவுள்ள அறக்கட்டளையின் பெயர் "ஸ்ரீ ராம்ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா" என்று அவர் அறிவித்தார். இந்த அறக்கட்டளையில் மொத்தம் 15 உறுப்பினர்கள் இருப்பார்கள். 15 உறுப்பினர்களில் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார். ஊடக அறிக்கையின்படி, அறக்கட்டளையில் சேர்க்கப்பட வேண்டியவர்களில் அயோத்தி ராஜ் குடும்பத்துடன் தொடர்புடைய வழக்கறிஞர் பராஷரன், காமேஷ்வர் சேபால், மஹந்த் தினேந்திர தாஸ் மற்றும் விமலிந்தர் மோகன் பிரதாப் மிஸ்ரா போன்ற பெயர்கள் உள்ளன.

நீண்டகாலமாக நடந்து வந்த அயோத்தி சர்ச்சையில் உச்ச நீதிமன்றம் ராமர் கட்டலாம் என்று தீர்ப்பளித்தது. ராம் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைக்க நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் கீழ் அறக்கட்டளையை உருவாக்கிய மத்திய அரசு அதற்கு "ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா" அறக்கட்டளை என்று பெயரிட்டது. 

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சர்ச்சைக்குரிய இடத்தின் உள் மற்றும் வெளி முற்றத்தை வைத்திருப்பது அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அரசிதழ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் அறக்கட்டளை திட்டத்தின் கீழ் நிலம் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது. ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில் 15 அறங்காவலர்கள் இருப்பார்கள். அவர்களில் ஒரு அறங்காவலர் எப்போதும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இருப்பார் எனக் கூறப்பட்டு உள்ளது.

இந்த அறக்கட்டளையில் இடம் பெறக்கூடிய நபர்களின் பெயர்களும் வெளிவருகின்றன. அறக்கட்டளையின் விதிகளின்படி, அதில் ஒன்பது நிரந்தர மற்றும் பரிந்துரைக்கப்பட்ட ஆறு உறுப்பினர்கள் இருப்பார்கள்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News