Ramar Idol Ornaments: ராமர் சிலை நகைககளில் 18,000 மரகதங்கள், வைரங்கள்... தங்கம் எத்தனை கிலோ தெரியுமா?

Ayodhya Ramar Idol Ornaments Details in Tamil: அயோத்தி குழந்தை ராமர் சிலையை தெய்வீகமாக தோற்றமளிக்க செய்யும் விலை உயர்ந்த நகைகள் குறித்த விவரங்களை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 23, 2024, 06:34 PM IST
  • குழந்தை ராமர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  • பிரதிஷ்டை பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்றது.
  • பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டது.
Ramar Idol Ornaments: ராமர் சிலை நகைககளில் 18,000 மரகதங்கள், வைரங்கள்... தங்கம் எத்தனை கிலோ தெரியுமா? title=

Ayodhya Ramar Idol Ornaments Details in Tamil:  ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளையால் திரட்டப்பட்ட நிதி மூலம் உத்தர பிரேதச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது. இரண்டு தளங்களை கொண்டதாக திட்டமிடப்பட்ட இந்த கோயிலின் தரைத்தளம் தற்போது நிறைவு பெற்றிருக்கும் நிலையில், அங்கு குழந்தை ராமரின் சிலை நேற்று பிரான் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

இந்த விழா நாடு முழுவதும் உள்ள இந்து மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் பலரும் கலந்துகொண்டனர். மேலும், பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவை நாடே தீபாவளி போல் கொண்டாடுவதாக பிரதமர் மோடி நேற்று தெரிவித்திருந்தார்.  

அந்த வகையில், அயோத்தி ராமர் கோவிலில், ஐந்து வயது குழந்தையாக தோற்றமளிக்கும் குழந்தை ராமர் சிலை அற்புதமான நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆடை, ஆபரணங்கள் மற்றும் மலர் அலங்காரங்களுடன் தோற்றமளித்த குழந்தை ராமரின் தெய்வீகமான புகைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில், ராமர் சிலையில் அலங்கரிக்கப்பட்டுள்ள நகைகளின் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | அயோத்தி ஸ்ரீராமரை தரிசிக்க... நேரம் & முன்பதிவு விபரங்கள்!

நூல்களை அடிப்படையாக வைத்து...

குறிப்பாக, குழந்தை ராமர் சிலையில் நகைகள் செய்வதற்கு சுமார் 15 கிலோ அளவில் தங்கம் பயன்படுத்தப்பட்டதாகவும், 18 ஆயிரம் வைரங்கள் மற்றும் மரகதங்கள் பயன்படுத்தப்பட்டன என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நகைகள் செய்வதற்கு கைவினைஞர்கள் சிரத்தையுடன் மேற்கொண்ட
பணி குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்யாத்மா ராமாயணம், ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், ஸ்ரீ ராம்சரித்மனாஸ், ஆளவந்தார் ஸ்தோத்ரா போன்ற நூல்களை அடிப்படையாக வைத்து, நகைகளின் ஒவ்வொரு பகுதியையும் நுட்பமாக வடிவமைத்துள்ளதாக கைவினைஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நூல்களில் விவரிக்கப்பட்டிருந்தபடி ராமரின் வேத அடிப்படையிலான அழகை இந்த நகைககளை வடிவமைப்பதன் மூலம் வெளிகாட்டியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

மொத்தம் 14 நகைகள்

நெற்றி திலகம், ஒரு கிரீடம், நான்கு நெக்லஸ்கள், ஒரு இடுப்புப் பட்டை, இரண்டு ஜோடி கணுக்கால் நகைகள், விஜய் மாலை, இரண்டு மோதிரங்கள் என மொத்தம் 14 பகுதிகள் கொண்ட இந்த அற்புதமான நகைகள் 12 நாட்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | “ராமர் என்ன கொடுத்தார்?” ராமர் கோயில் குறித்து பேசிய 13 வயது சிறுவன்..வைரல் வீடியோ!

குழந்தை ராமர் சிலைக்கு நகைகள் தயாரிக்கும் பொறுப்பு உத்தர பிரதேச தலைநகர் லக்னோவின் ஹர்சஹய்மல் ஷியாம்லால் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ராம்ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சுமார் 15 நாட்களுக்கு முன்பு நகைக்கடையை தொடர்பு கொண்டு இந்த பொறுப்பை வழங்கியிருக்கிறது.

திலகம் 

நெற்றியில் தெய்வீக அடையாளத்தை குறிக்கும் சிவப்பு நிற திலகம் சுமார் 16 கிராம் தங்கத்தைப் பயன்படுத்தி, மையத்தில் மூன்று காரட் வைரங்களும், இருபுறமும் 10 காரட் வைரங்களும் பதித்து உருவாக்கப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட பர்மிய ரூபி கல் அதன் அழகை மெருகூட்டியுள்ளது.

கிரீடம்

கிரீடம் தான் இந்த நகை தொகுப்பின் மிக மிக குறிப்பிடத்தகுந்த ஒன்று. அதன் நுட்பமான விவரங்கள் மிகவும் கவனத்துடன் செய்யப்பட்டது. ஒரு ஐந்து வயது சிறுவனின் தலைப்பாகையை இந்த கிரீடம் ஒத்திருக்கிறது, இது ராமரின் ஐந்து வயது சிறுவனின் இளமை வயதை குறிக்கிறது எனலாம். ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் ஒரு குறிப்பிட்ட கோரிக்கை இது என கூறப்படுகிறது. 

அதாவது, இந்த வயது குழந்தைக்கு ஏற்ற கிரீடம் போல் இருக்க வேண்டும் என கூறியுள்ளனர். 22 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட கிரீடம் மட்டும் 75 காரட் வைரங்கள், 175 காரட் ஜாம்பியன் மரகதங்கள், 262 காரட் மாணிக்கங்களுடன் தோராயமாக 1.7 கிலோ எடை கொண்டது. மேலும் இது ராமரின் சூர்யவன்ஷி பரம்பரையைக் குறிக்கும் சூரிய பகவானின் சின்னத்தை வெளிப்படுத்துகிறது. 

மரகத மோதிரம்

மரகத மோதிரமும் இந்த நகைகளில் குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும். 65 கிராம் எடையுள்ள இந்த மோதிரம் நான்கு காரட் வைரங்கள், 33 காரட் மரகதம் மற்றும் ஒரு ஜாம்பியன் மரகதம் ஆகியவற்றின் மையத்தில், மோதிரம் ராமரின் ஞானத்தையும், அவர் காடுகளில் வாழ்ந்த நாட்களில் இயற்கையுடனான அவரது இணக்கமான உறவையும் குறிக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | ராம் ரஹீம்... ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் இஸ்லாமிய பெண் செய்த 'நச்' சம்பவம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News