ராமர் கோயில்-பாபர் மசூதி வழக்கு: நீதிமன்றத்துக்கு வெளியே பேசி தீர்க்கலாம் -சுப்ரீம்கோர்ட்

Last Updated : Mar 21, 2017, 11:54 AM IST
ராமர் கோயில்-பாபர் மசூதி வழக்கு: நீதிமன்றத்துக்கு வெளியே பேசி தீர்க்கலாம் -சுப்ரீம்கோர்ட்  title=

பாபர் மசூதி வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுரை.

கடந்த 1992-ஆம் டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதியை வன்முறை கும்பல் இடித்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் கூட்டு சதி செய்ததாக சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால், அவர்களை விடுதலை செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் சிபிஐ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் தலைமை நீதிபதி ஜே.எஸ்., கெஹர் அமர்வு முன்பு வந்தது. நீதிபதிகள் சில யோசனைகளை தெரிவித்தார். மத ரீதியிலான இந்த உணர்ச்சிப்பூர்வமான விஷயத்தில் இரு தரப்பும் கோர்ட்டுக்கு வெளியே பேசி தீர்க்கலாம். நாங்களும் மத்தியஸ்தம் செய்ய தயார். அதே நேரத்தில் முடியாத பட்சத்தில் கோர்ட் தலையிடவும் தயாராக இருக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Trending News