ரக்‌ஷா பந்தன்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

Last Updated : Aug 7, 2017, 09:00 AM IST
ரக்‌ஷா பந்தன்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து title=

ரக்‌ஷா பந்தன் பண்டிகையை ‘ராக்கி’ என்றும் அழைப்பர். இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர். ‘ரக்‌ஷா பந்தன்’ என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள். 

இந்நாளில், பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து, தமது சகோதரர்களின் ‘மணிக்கட்டில் ராக்கி கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பர். மேலும், அவர்கள், சகோதரர்களின் நெற்றியில் சிகப்பு குங்குமம் வைத்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய பின்பு, மணிக்கட்டில் ராக்கி என்னும் புனிதக் கயிற்றைக் கட்டுவர். இதற்கு சகோதரர்களும் பாசத்தை தெரிவிக்கும் விதமாக அவர்களுக்குப் பல பரிசுப் பொருட்களை வழங்குவர்.  

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் பவுர்ணமி நாளான இன்று ‘ரக்‌ஷா பந்தன்’ விழாவை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து:-

 

 

பிரதமர் மோடி வாழ்த்து:-

 

 

Trending News