டெல்லியில் பல இடங்களில் திடீரென்று இன்று காலை முதல் பலத்த காற்றுடன் மழை பரவலாக பெய்து வந்தது.இதனால் வெப்பம் தணிந்து, குளிர் காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Rain lashes parts of Delhi; #visuals from Delhi Cantonment area pic.twitter.com/JCeqnPzrCw
— ANI (@ANI) April 9, 2018
Visuals from #Delhi's India Gate after rains lashed the national capital, bringing respite from rising mercury. pic.twitter.com/EaoiEF9RyH
— ANI (@ANI) April 9, 2018
Rain lashed parts of the national capital, bringing respite from heat. Visuals from Moti Bagh. #Delhi pic.twitter.com/2oC2plRhWX
— ANI (@ANI) April 9, 2018
ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். பகலில் அடித்த வெப்பத்தின் காரணமாக, இரவில் வீசும் அனல்காற்றால், இரவு தூங்க முடியாத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று காலை 5 மணியளவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. டெல்லி மட்டுமின்றி அதன் சுற்றுப்புறத்திலும் லேசான மழை பெய்தது. அனல்காற்றால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 6-ம் தேதி டெல்லியில் கரும் இருள் எங்கும் சூழ்ந்தவாரு இருந்த நிலையில், வேகமான காற்றுடன் புழுதிப்புயல் வீசியது இதனால் மக்கள் அவதிப்பட்டனர். மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தற்போது இன்று காலை முதல் தலைநகர் டெல்லியில் மழை பெய்ததால், டெல்லி வாழ் மக்கள் மகிழ்ச்சியடைந்ததுள்ளனர்.