ரயில்வேயில் இனி 'எம் ஆதார்' புதிய வசதி அறிமுகம்!

Last Updated : Sep 14, 2017, 09:02 AM IST
ரயில்வேயில் இனி 'எம் ஆதார்' புதிய வசதி அறிமுகம்! title=

ரயில் பயணத்தின்போது தங்கள் மொபைலில் உள்ள டிஜிட்டல் வடிவ ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இந்திய ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள, 'எம் ஆதார்' என்ற ஆப்-பை பயன்படுத்தி ஆதார் அடையாள அட்டையை, மொபைல் போனுக்கு பதிவிறக்கம் செய்யலாம். 

ஆதார் அட்டையில் எந்த மொபைல் எண் உள்ளதோ அந்த எண் பயன்படுத்தப்படும் மொபைல்போனில் மட்டுமே இந்த ஆப்-பை பதிவிறக்கம் செய்ய முடியும். 

ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்யும் பயணியர் பயணத்தின்போது தங்கள் மொபைலில் உள்ள இந்த ஆப்-பை பயன்படுத்தி டிஜிட்டல் ஆதார் அடையாள அட்டையாக ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Trending News