‘மத்திய பட்ஜெட் 2020’ - ரயில்வே துறை எதிர்பார்ப்புகள் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பிப்ரவரி 1-ஆம் தேதி ‘Union Budget 2020’-ன் முன்வைக்கத் தயாராகி வரும் நிலையில், அடிக்கடி ரயிலில் பயணிக்கும் பயணிகள் இத்துறையில் பெரிய அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள். 

Last Updated : Jan 23, 2020, 08:17 PM IST
‘மத்திய பட்ஜெட் 2020’ - ரயில்வே துறை எதிர்பார்ப்புகள் என்ன? title=

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பிப்ரவரி 1-ஆம் தேதி ‘Union Budget 2020’-ன் முன்வைக்கத் தயாராகி வரும் நிலையில், அடிக்கடி ரயிலில் பயணிக்கும் பயணிகள் இத்துறையில் பெரிய அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள். 

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இந்திய ரயில்வே குறித்த தங்கள் எதிர்பார்ப்புகளையும், அவர்கள் என்ன மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள் என்பதையும் மக்கள் ஜீ மீடியாவுடன் தெரிவித்தனர். அந்த வகையில் மக்களின் கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • ரயில்வே பயணிகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, ரயில்களின் நேரத்தை மேம்படுத்துவதில் மிகப்பெரிய தேவை வேண்டும் என்பது. நெடுந்தொலைவு பயணிக்கும் ரயில்கள் பலவும் சுமார் 1-லிருந்து 2 மணி நேரம் தமதமாகவே சேருமிடைத்தை அடைகின்றன. இந்த பிரச்சனையினை போக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது மக்களின் பிரதாண கோரிக்கையாக உள்ளது.
  • ரயில் பயணத்தின் போது வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். சில வழங்குனர்கள் இந்த சேவையினை சிறப்பாக செயல்படுத்தினாலும், இந்த சேவையினை மேலும் மேம்படுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.
  • பயணத்தின் போது பயணிகளை ஈடுபடுத்திக்கொள்ள ஆன்-போர்டு பொழுதுபோக்குக்கான கோரிக்கை.
  • பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தளங்கள் மற்றும் ரயில்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவுதல் வேண்டும்.
  • ரயில் நிலையங்களின் தூய்மையில் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், என்றபோதிலும் மேலும் மேம்பாடுகள் தேவையெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
  • பயணிகள் அதிக கட்டணம் செலுத்துவதைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் ரயில்வே வசதிகளை வழங்குவதைத் தவிர்க்கக்கூடாது என்று விரும்புகிறார்கள். ஆக, தேஜாஸ் போன்ற ரயில்களின் எண்ணிக்கையில் அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

மக்களின் கோரிக்கைகள், இந்த முறை பட்ஜெட் ரயில்வேக்கு பல புதிய மற்றும் சிறந்த பரிசுகளை கொண்டு வர வேண்டும் என்பதை எதிர்பார்க்கின்றனர் என தெரியப்படுத்துகிறது.

---மத்திய பட்ஜட் 2020---

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21-ஆம் ஆண்டுக்கான மோடி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தின் பொது பட்ஜெட்டை 2020 பிப்ரவரி 1-ஆம் தேதி முன்வைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் அமர்வு ஏப்ரல் வரை தொடரலாம் எனவும் கூறப்படுகிறது. 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர், புது வீடு வாங்குபவர்களுக்கு வருமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சியை மந்தநிலையில் இருந்து மீட்டெடுக்கவும், அன்னிய முதலீடுகளை ஈர்க்கவும், கடந்த செப்டம்பரில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் பட்ஜெட்டில் நடுத்தர வரக்கத்தினர், 10% அளவுக்கு வருமான வரிச்சலுகை அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ரியல் எஸ்டேட் தொழிலை மேம்படுத்தும் நோக்கில், புதிதாக வீடு வாங்குபவர்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில், பட்ஜெட்டில் சலுகைகள் இருக்காலம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்தாலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற பட்ஜெட் அமர்வு ஆனது 2020 ஜனவரி 31 முதல் தொடங்கும் எனவும், ஏப்ரல் மாதம் வரை இயங்கும் எனவும் தெரிகிறது. மேலும் இந்த பட்ஜெட் அமர்வு ஆனது இரண்டு பகுதிகளாக இருக்கும் எனவும், முதல் அமர்வு ஜனவரி 31 முதல் தொடங்கி பிப்ரவரி 7 வரையிலும், இரண்டாவது அமர்வு மார்ச் இரண்டாவது வாரத்தில் தொடங்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Trending News