புதுடெல்லி: இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் போக்குவரத்து கழகத்திற்கு (IRCTC) பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், இரயில் டிக்கெட்டுகளின் ஆன்லைன் முன்பதிவில் வசூலிக்கப்படும் சேவை கட்டணத்தை IRCTC பகிர்ந்து கொள்ளும் முடிவை திரும்பப் பெற ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் ரயில் பயணத்திற்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யும் போது ஏசி அல்லாத பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டிற்கு 10 ரூபாயும், ஏசி பெட்டிகளுக்கு 20 ரூபாயும் சேவைக் கட்டணமாக டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் முன்பதிவு செய்வதன் மூலம் கிடைக்கும், சேவை கட்டண வருமானத்தில் 50 சதவீதத்தை ரயில்வேயுடன் பகிர்ந்து கொள்ள ரயில்வே அமைச்சகம் கேட்டுக் கொண்டதாக வியாழக்கிழமை தெரிவித்தது. இப்போழுது, பகிர்ந்து கொள்ள தேவையில்லை என இந்திய ரயில்வே கூறியுள்ளது
கடந்த 2019-20ஆம் நிதியாண்டில் சேவை கட்டணம் மூலம் 349.64 கோடி ரூபாயை வருவாயை IRCTC ஈட்டியுள்ளது. இருப்பினும் கொரோனா நெருக்கடி காரணமாக, 2020-21ஆம் நிதியாண்டில் யணிகள் வருகை குறைந்ததை அடுத்து வருமானமும் பெருமளவு குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | IRCTC E-Catering: தரமான உணவு பெற அங்கீரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் பட்டியல் இதோ..!!!
கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்திய ரயில்வே மற்றும் IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவிற்கான சேவை கட்டணத்தை 20:80 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. பின்னர், 2015ம் ஆண்டு 50:50 என்ற அளவில் சமமாக பங்கிட்டுக் கொள்ள தொடங்கினர். ஆனால் 2016 நவம்பர் மாதத்தில் இருந்து சேவை கட்டணத்தை பகிர்ந்து கொள்ளும் நடைமுறை கைவிடப்பட்ட நிலையில், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் IRCTC வசூலிக்கும் சேவைக் கட்டணத்தில் 50 சதவீதத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முன்னதாக ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது.
இதை அடுத்து, இன்று காலை பங்குச்சந்தை தொடங்கிய சில நிமிடங்களில் சரிய தொடங்கிய IRCTC பங்குகளின் விலை சரியத் தொடங்கின. எனினும் சேவைக் கட்டணத்தில் 50 சதவீத பங்கு கேட்கும் தனது முடிவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக ரயில்வே அமைச்சகம் திடீரென, இன்று காலை அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து ஐஆர்சிடிசி பங்குகளின் விலை படிப்படியாக ஏறத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Indian Railways: இப்போது ‘வேறு ஒருவரும்’ உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR