பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தற்போது குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் தெற்கு குஜராத்தின் பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கி வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குஜராத் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி கடந்த சனி முதல் பருவமழை தொடங்கும் என தெரிவித்து இருந்தது. இதனால் தெற்கு குஜராத் துவங்கி கேரளா எல்லை வரையுள்ள கடற்கரை பகுதிகளில் பலமான மழைப்பொழிவுக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்தது.
#Gujarat: Rail movement between Bhilad & Sanjan has been affected due to very heavy rainfall in the region. Efforts for restoration underway- Western Railway pic.twitter.com/XKi7d1RbGt
— ANI (@ANI) June 25, 2018
இதன் காரணமாக தற்போது மிகுந்த வேகத்துடன் காற்று வீசுவதாலும் சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்குவதாலும், பள்ளம் மேடு தெரியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இன்று அதிகாலை முதல் தொடர் மழையால் தெற்கு குஜராத்தின் குட்ச், ஸௌராஸ்ட்ரா, வலசத், நவசாரி, ஹெவேலி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதன் காரணமாக பிலாட் மற்றும் சன்ஞன் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தொடர்வண்டி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.