ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது; திமுக தலைவர் ஸ்டாலின்!

பா.ஜ.க-வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொன்ன கருத்து முக்கியமானது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

Last Updated : Nov 2, 2018, 04:11 PM IST
ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது; திமுக தலைவர் ஸ்டாலின்! title=

பா.ஜ.க-வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொன்ன கருத்து முக்கியமானது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் டிசம்பர் 7-ஆம் நாள் சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்தாண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு அவர்கள்.. “தேசத்தை காப்பாற்ற நாங்கள் ஒன்றாக இணைகிறோம். பழைய கசப்புகளை மறந்து தற்போது ஜனநாயக கட்டாயத்தின் பேரில் ஒன்றினைகிறோம். எல்லா எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் இணைய வேண்டும்" என தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த கருத்தினை வரவேற்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

காங்கிரஸ் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது!

‘தேசத்தைப் பாதுகாக்க இது ஜனநாயக நிர்பந்தம்’ என்று சந்திரபாபு நாயுடு அவர்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன். மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும்! என பதிவிட்டுள்ளார்!

Trending News