மீண்டும் காங்கிரஸின் தேசியத் தலைவராகிறாரா ராகுல் காந்தி?

 காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தி இன்று நடத்திய முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராகுல் காந்தியிடம் கட்சியின் தலைமை பொறுப்பை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது.கட்சி எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 19, 2020, 07:54 PM IST
  • மீண்டும் காங்கிரஸ் தலைவராகிராறா ராகுல் காந்தி?
  • சோனியாகாந்தியின் வீட்டில் இன்று முக்கியக் கூட்டம் நடைபெற்றது
  • கட்சிக்கு நிலையான தலைமை வேண்டும் என மூத்தத் தலைவர்கள் கருத்து
மீண்டும் காங்கிரஸின் தேசியத் தலைவராகிறாரா ராகுல் காந்தி?    title=

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தி இன்று நடத்திய முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராகுல் காந்தியிடம் கட்சியின் தலைமை பொறுப்பை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது.கட்சி எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லமான 10 ஜன்பத்தில் கட்சியின் மூத்த தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைமையை ராகுல் காந்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது. இது குறித்து பேசிய ராகுல் காந்தி (Rahul Gandhi), கட்சி அவருக்கு எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவேன் என்று கூறினர். அதுமட்டுமல்ல, கட்சியின் தலைவராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதை அனைவரும் சேர்ந்து எடுக்கவேண்டும், வாக்கெடுப்பு நடத்தினால் நல்லது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Also Read | விவசாயிகளை முன்னேற விடுங்கள் : பிரதமர் நரேந்திர மோடி

ராகுல் தயார்! 
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் (Congress)  மூத்த 20 தலைவர்கள் கலந்துக் கொண்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 5 மணி நேரம் நீடித்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் ராகுல் காந்தியை தலைவராக்க (Congress President) வேண்டும் என்று ஒருமனதாக தெரிவித்தனர். பல மூத்த தலைவர்கள் உட்பட அனைவரும் ராகுலுக்கு ஆதரவாகவே பேசினார்கள்.

கட்சி, சரியான தலைமையையும், கட்சியின் அமைப்பில் மாற்றமும் தேவைப்படுகிறது, இது காலத்தின் கட்டாயம் என்று கூறப்பட்டது. 'மூத்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறேன். பல மூத்தத் தலைவர்களும் எனது தந்தையுடன் பணியாற்றியுள்ளனர். 'மூத்த தலைவர்கள் தலைவராக இருக்க வேண்டும் என்ற வற்புறுத்துவதன் பேரில்,' கட்சி கொடுக்கும் எந்தப் பொறுப்பையும் நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்' என்று என்று ராகுல் காந்தி கூறியதாக வட்டாரங்கள் கூறுகின்றன.  

கூட்டத்தில், சோனியா காந்தி (Sonia Gandhi), அனைத்து தலைவர்களும் ஒன்றாக நடந்து அமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று கூறினார். எதிர்வரும் காலத்தில், கட்சி, அரசாங்கம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் மற்றும் பிற செயல்பாடுகள் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் ராகுல் காந்தி கூறினார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் குமார் பன்சால், 'கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி (Congress) ஒரு பெரிய குடும்பம், கட்சி பலப்படுத்தப்பட வேண்டும் என்று சோனியா காந்தி (Sonia Gandhi) கூறினார். அதையே ராகுல் காந்தி வழிமொழிந்தார்' என்று கூறினார். 

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் (Prithviraj Chavan) கூறுகையில், ”இன்று முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற பல கூட்டங்கள் நடைபெறும். சிம்லா மற்றும் பஞ்சமரி வழிகளில் ஒரு சிந்தனை முகாமும் நடத்தப்படும், விவாதங்கள் ஒரு நல்ல சூழலில் நடத்தப்பட்டன. கட்சியை வலுப்படுத்த எந்த பிரச்சினைகள் எழுப்பப்பட்டாலும், அது கருத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

Also Read | சட்டசபையில் வேளாண் சட்ட நகலை கிழித்த கேஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக போலீஸில் புகார்

கடிதங்கள் எழுதிய தலைவர்களும் சந்தித்தனர் 
ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம் (P Chidambaram), ஏ.கே. ஆண்டனி, அம்பிகா சோனி (Ambika Soni), அசோக் கெஹ்லோட், கமல்நாத் மற்றும் ஹரிஷ் ராவத் ஆகியோர் சோனியா காந்தியை சந்தித்தனர். 10 ஜன்பத்தில் சோனியாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, மணீஷ் திவாரி, சஷி தரூர் மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டனர். கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் இந்த தலைவர்களும் அடங்குவர். 

சோனியா காந்தியுடன் இந்த தலைவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் (Kamal Nath) முக்கிய பங்கு வகித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. கமல்நாத் சில நாட்களுக்கு முன்பு சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

கடந்த ஆகஸ்டில், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல் உள்ளிட்ட 23 காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள். கட்சியின் தேசியத்தலைவர் மற்றும் கட்சி அமைப்பில் புத்துயிர் ஊட்ட வேண்டியதன் அவசியம் பற்றிய கடிதம் அது. கட்சி தலைமைக்கும் குறிப்பாக காந்தி குடும்பத்திற்கும் விடுக்கும் சவால் இது என்று பல காங்கிரஸ் தலைவர்கள் இந்த கடிதத்தை விமர்சித்தனர். குலாம் நபி ஆசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல தலைவர்கள் கோரினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க்து. 

Also Read | இந்த முறை பட்ஜெட் முன்பு இல்லாத வகையில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News