மோடியின் பேச்சு வேடிக்கையாக உள்ளது -ராகுல் காந்தி தாக்கு!

வாரணாசியை போல் கேரளாவை தான் பார்பதாக பிரதமர் மோடி கூறியது வேடிக்கையாக உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!

Last Updated : Jun 9, 2019, 03:29 PM IST
மோடியின் பேச்சு வேடிக்கையாக உள்ளது -ராகுல் காந்தி தாக்கு! title=

வாரணாசியை போல் கேரளாவை தான் பார்பதாக பிரதமர் மோடி கூறியது வேடிக்கையாக உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் உள்ள மக்களுக்கு நன்றி தெரிவிக்கு விதமகா மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலம் அமோதியில் தோற்கடிக்கப்பட்ட ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாட்டில் வெற்றி பெற்று மக்களவை சென்றுள்ளார். இதனால் தனக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்று தந்த கேரளா மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராகுல் கேரளா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவரது சுற்றுப்பயணத்தின் கடைசி நாளான இன்று கோழிக்கோடு பகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், " வாரணாசியை போல் கேரளாவும் தன் மனதுக்கு நெருக்கமான இடம் என மோடி கூறியது வேடிக்கையாக உள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களையும், பிற மாநிலங்களையும் மோடி வெவ்வேறு விதமாக கையாண்டு வருகின்றார்" என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர் வயநாடு தொகுதி மக்களின் பிரச்சனைகள் குறித்து தாம் அறிந்துள்ளதாகவும், அதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

முன்னதாக தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று, வயநாடு மாவட்டம் கல்பெட்டா பகுதியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் பேசிய அவர் "மக்களவைத் தேர்தலின்போது, பிரதமர் மோடியின் பிரச்சாரம், பொய்களாலும், விஷம் போல் தீங்கு விளைவிப்பதாகவும், வெறுப்புணர்வை தூண்டும்விதமாகவும் இருந்தது. காங்கிரசின் பரப்புரை, உண்மையையும், அன்பையும், பாசத்தையும், பரப்புவதாக அமைந்திருந்தது என குறிப்பிட்டு பேசினார்.

Trending News