பாலகோட் போன்ற வான்வழித் தாக்குதல்களுக்குத் எப்போதும் தயார்: RKS பதோரியா

விமானப்படையின் 26-வது தளபதியாக ராகேஷ்குமார் சிங் பதோரியா பொறுப்பேற்றுக் கொண்டார்!!

Last Updated : Sep 30, 2019, 02:33 PM IST
பாலகோட் போன்ற வான்வழித் தாக்குதல்களுக்குத் எப்போதும் தயார்: RKS பதோரியா title=

விமானப்படையின் 26-வது தளபதியாக ராகேஷ்குமார் சிங் பதோரியா பொறுப்பேற்றுக் கொண்டார்!!

தற்போதைய விமானப்படை தளபதியாக  இருந்த பி.எஸ்.தனோவா இன்றுடன்  ஓய்வு பெற்றுள்ளார் .இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆர்.கே.எஸ்.பதாரியா தற்போது இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக உள்ளார். 

இந்நிலையில், இன்று இந்திய விமானப்படையின் 26-வது தளபதியாக ராகேஷ்குமார் சிங் பதோரியா பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, இன்று பதவியேற்றுக் கொண்டு தேசிய போர் நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்; பாலகோட் தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் நடத்தவும், அனைத்து சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம். தாக்குதல் தொடர்பாக எந்த அறிவிப்பு வந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். திறன் வாய்ந்த போர் விமானமான ரபேலுக்கு முன்னுரிமை அளிப்பேன். அது பாக்., மற்றும் சீனாவின் இந்திய எல்லை பிரச்னைகளை எதிர்கொள்ள இந்தியாவின் சிறந்த ஆயுதமாக இருக்கும்.

அணு ஆயுத போர் ஏற்படும் என பாக்., பிரதமர் கூறியது, அவர்களது புரிதல் ஆகும். ஆனால், அணு ஆயுதங்கள் பற்றிய சொந்த புரிதல் மற்றும் பகுப்பாய்வுகள் எங்களிடம் உள்ளன. எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு பதாரியா கூறினார். 

 

Trending News