ரஃபேல் விவகாரம்: I am Waiting என அருண்ஜேட்லிக்கு பதில் அளித்த ராகுல்காந்தி

ரபேல் போர் விமான விவகாரம் குறித்து காங்கிரஸிடம் கேள்விகளை எழுப்பிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 29, 2018, 07:37 PM IST
ரஃபேல் விவகாரம்: I am Waiting என அருண்ஜேட்லிக்கு பதில் அளித்த ராகுல்காந்தி title=

ரபேல் போர் விமான விவகாரம் குறித்து காங்கிரஸிடம் கேள்விகளை எழுப்பிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், ரபேல் ஒப்பந்தத்தை "பெரும் கொள்ளை" என்று கூறியுள்ளார். திரு. ஜெட்லி அவர்களுக்கு மிக்க நன்றி. ரபேல் விவகாரத்தை மக்களின் கவனத்துக்கு கொண்டுவந்தற்கு. எப்படி? பாராளுமன்றக் கூட்டு குழு மூலமாகவா? ஆனால் உங்களுடைய தலைவர் தனது நண்பனை பாதுகாக்க முயல்வார். இது சிரமமாக இருக்கலாம். எனவே ஆராய்ந்து யோசனை செய்து அடுத்த 24 மணிநேரங்களில் பதில் அளிக்கவும். நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்" என கூறியுள்ளார்.

 

முன்னதாக, இன்று காலை ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாற்றுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஆதாரமற்ற புகார்களை காங்கிரஸ் கூறி வருகிறது. ரபேல் போர் விமானத்தின் விலை பற்றி ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது. மாறுப்பட்ட கருத்தை கூறி வருகிறார். இது பள்ளியில் படிக்கும் குழந்தைகள் கூறுவது போல உள்ளது எனவும் அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். 

ரஃபேல் விமான ஒப்பந்தம் பற்றி பல்வேறு புள்ளிவிவரங்கள் மூலம் பல்வேறு பொய்களை பரப்பி வருகிறது எனவும் ஜேட்லி தெரிவித்தார். ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பல விவாதங்கள் ஏற்ப்பட்டு வருகிறது. எனவே காங்கிரஸில் இருந்து உடனடி பதிலைக் கோரி, அருண் ஜேட்லி 15 கேள்விகளை முகநூலில் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News