ரபேல் ஒப்பந்த: காங்கிரஸிடம் பதில் கேட்டு 15 கேள்விகளை பதிவிட்ட அருண் ஜேட்லி

ரபேல் போர் விமான விவகாரம் குறித்து ராகுல்காந்தியிடம் 15 கேள்விகளை எழுப்பிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 29, 2018, 04:40 PM IST
ரபேல் ஒப்பந்த: காங்கிரஸிடம் பதில் கேட்டு 15 கேள்விகளை பதிவிட்ட அருண் ஜேட்லி title=

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாற்றுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஆதாரமற்ற புகார்களை காங்கிரஸ் கூறி வருகிறது. ரபேல் போர் விமானத்தின் விலை பற்றி ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது. மாறுப்பட்ட கருத்தை கூறி வருகிறார். இது பள்ளியில் படிக்கும் குழந்தைகள் கூறு வது போல உள்ளது எனவும் அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மேலும் ராகுல் காந்தியை நோக்கி 15 கேள்விகளை கேட்டு தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

முதலில் ரஃபேல் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டது காங்கிரஸ் தான். பின்னர் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தியது காங்கிரஸ் என்பதை ராகுல் காந்தி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி மூன்று விதமான குற்றங்களை செய்துள்ளது. அது, 

1. முதலாவதாக, தேசிய பாதுகாப்பு கொண்ட ஒப்பந்தத்தை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) தாமதப்படுத்தியது.
2. இரண்டாவதாக, ராகுல் மற்றும் காங்கிரஸின் விலை மற்றும் செயல்முறை பற்றிய அறிக்கை முற்றிலும் தவறானது.
3. மூன்றாவதாக, ரஃபேல் ஒப்பந்தம் பற்றி தவறான கருத்துக்களை கூறுவதன் மூலம் பாதுகாப்பு கொள்முதல் தாமதப்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதன் விளைவாக, இந்தியாவின் பாதுகாப்புத் துறை பாதிக்கப்படுகிறது.

 

 

 

ரஃபேல் விமான ஒப்பந்தம் பற்றி பல்வேறு புள்ளிவிவரங்கள் மூலம் பல்வேறு பொய்களை பரப்பி வருகிறது எனவும் ஜேட்லி தெரிவித்தார்.

ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பல விவாதங்கள் ஏற்ப்பட்டு வருகிறது. எனவே காங்கிரஸில் இருந்து உடனடி பதிலைக் கோரி, அருண் ஜேட்லி 15 கேள்விகளை முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Trending News