ரபேல் விவகாரத்தில் மாறி மாறி குற்றச்சாட்டும் தேசிய கட்சிகள்

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிஜேபி மற்றும் காங்கிரஸ் இடையே வாக்குவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒருவரையொருவர் குறைக்கூறி கொண்டு இருக்கின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 20, 2018, 09:29 PM IST
ரபேல் விவகாரத்தில் மாறி மாறி குற்றச்சாட்டும் தேசிய கட்சிகள் title=

ரபேல் போர் விமான ஒப்பந்தம் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ரூ. 540 கோடிக்கு இருந்த ஒப்பந்தம் எப்படி ரூ. 1600 கோடி மாறியது. அது என்ன மந்திரத்தால் மாறியதா? எனக் கேள்வி எழுப்பி வருகிறது காங்கிரஸ். இதனால் பிஜேபி மற்றும் காங்கிரஸ் இடையே வாக்குவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒருவரையொருவர் குறைக்கூறி கொண்டு இருக்கின்றனர். 

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், டசால்ட் நிறுவனம் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் நடத்தி பேச்சுவார்த்தையில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் ரஃபெல் விமானங்களை தயாரிக்க போதிய திறனை பெற்று இருக்கவில்லை என்று கூறியது, இதனால் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்க முன்வரவில்லை. ரபேல் போர் விமானங்களை தயாரிப்பது தொடர்பாக டசால்ட் நிறுவனத்துக்கும், இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு இடையே ஒப்பந்தம் ஏற்படவில்லை என தெரிவித்திருந்தார். 

பின்னர் எச்.ஏ.எல் நிறுவத்தின் முன்னாள் உயர்மட்டத் தலைவர் டி. சுவார்ணா ராஜு, "இந்தியாவில் ரஃபெல் விமானங்களை எச்.ஏ.எல் நிறுவனத்தால் உருவாக்க முடியும். அதற்கான தகுதியும், திறமையும் உண்டு. எச்.ஏ.எல் உடன்படிக்கை படி குறிப்பிட்ட விலைக்குள் விமானங்களை தயாரிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதேவேளையில் ரஃபெல் விமானங்களை கட்டமைக்கும் திறமை எச்.ஏ.எல் நிறுவனத்துக்கு இல்லை எனக்கூறுவது ஏற்க முடியாது. எச்.ஏ.எல்(HAL) நிறுவத்தால் 25 டன் கொண்ட சூஹோய்-30 போர் விமானம் உருவாக்கும் போது, நிச்சயமாக ரஃபெல் போர் விமானங்களையும் உற்பத்தி செய்ய முடியும் என தங்கள் மீதான  பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.

இந்நிலையில், எச்..ஏ.எல் நிறுவத்தின் முன்னாள் உயர்மட்டத் தலைவர் டி. சுவார்ணா ராஜுவின் பேட்டியை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரஃபெல் விமான ஒப்பந்தம் குறித்து கூறியது "பொய்" என நிரூபணம் ஆகியுள்ளது. எனவே "ரஃபெல் மினிஸ்டர்" உடனடியா பதவி விலக வேண்டும் எனக் கூறினார்.

இதனையடுத்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, "ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து பொய் கூறி வருகிறார். பொய்களை கூறிவரும் ராகுல் காந்தி ஒரு "கோமாளி இளவரசர்". இவரைப்பற்றி ஜனநாயக நாடான இந்தியா தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என விமர்சனம் செய்துள்ளார் மத்திய நிதி அமைச்சர்.

Trending News