யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் பரீட்சையில், புனே மாணவியான ஸ்ருதி வினோத் ஸ்ரீகாண்டே, மகளிர் வரிசையில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்!
OTA பிரிவு பணிகளுக்கான, ஒருங்கிணைந்த பாதுகாப்பு துறை தேர்வு-1 -ன் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முடிவுகளை UPSC இன்று வெளியிட்டது. இந்த தேர்வு முடிவுகளின் படி புனே மாணவியான ஸ்ருதி வினோத் ஸ்ரீகாண்டே, மகளிர் வரிசையில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வின் முடிவுகளை UPSC-ன் அதிகாரபூர்வு இணையதளமான upsc.gov.in -ல் வெளியடப்பட்டுள்ளது!
பிரிகடியர் வினோத் ஸ்ரீகாண்டின் மகளான ஸ்ருதி, புனேயில் உள்ள ILS சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர் ஆவார். மேலும் புனேவில் உள்ள இராணுவப் பொதுப் பள்ளியின் முன்னாள் மாணவரும் ஆவார்.
இந்த இறுதி தேர்வில் மொத்தம் 232 தேர்வாலர்கள் நாட்டில் தகுதி பெற்றுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெண்கள் வரிசையில் ஸ்ருதி-யும் ஆண்கள் வரிசையில் நிப்புரன் தாட்டா முதலிடம் பெற்றுள்ளார் எனவும் தெரிவித்தனர்.