புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடிக்கு காங்கிரஸ் தலைவர் ட்விட்டரில் பாராட்டு!!
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நேரம், இடத்தை இந்திய ராணுவமே முடிவு செய்து கொள்ளலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருந்தார். இந்த நிலையில் புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரும் வகையில், இந்திய -பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், தீவிரவாத முகாம்கள் மீது சக்தி வாய்ந்த குண்டுகள் வீசிப்பட்டன. 12 மிராஜ் 2,000 ரக போர் விமானங்கள் இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை சுமார் 1,000 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை வீசியதில் தீவிரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிந்தன.
இந்த பதில் தாக்குதலுக்கு, இந்திய காங்கிரஸ் தலைவர் ட்விட்டரில் இந்திய ராணுவப்படையினரை பாராட்டியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்திய விமானப்படை விமானிகளுக்கு என் வணக்கங்கள்" என தெரிவித்துள்ளார்.
Congress President Rahul Gandhi tweets, "I salute the pilots of the IAF" (file pic) pic.twitter.com/1mf0BUjDTD
— ANI (@ANI) February 26, 2019
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில்CRPF வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.