Live-In Relationship Latest News In Tamil: நவீன காலத்தில் திருமணம், குடும்பம் ஆகிய அமைப்புகள் அதன் இருக்கமான நடைமுறைகளில் இருந்து தற்போது தளர்வடைய தொடங்கியிருக்கின்றன. இது ஆரோக்கியமான சூழல் என கூறலாம். ஆண்களுக்கு நிகராக பெண்களும் பொருளாதார சுதந்திரத்துடன் செயல்படுவதே இதற்கு முக்கிய காரணம் எனலாம். குடும்பம், உறவு என்ற பெயரில் ஒருவரையொருவர் சுரண்டும் போக்கு என்பது தளர்வடைய வேண்டும் என்பதே பல தத்துவஞானிகளின் கூற்றாக இருந்துகிறது.
அந்த வகையில், சட்ட ரீதியாக திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்-இன் (Live-In Relationship) உறவில் தம்பதிகள் இருக்கும் போக்கும் தற்போது அதிகமாகி உள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்கள் மட்டுமின்றி வேற்று பாலின ஈர்ப்பாளர்களும் கூட தற்போதைய காலகட்டத்தில் திருமண முறையை கைக்கொள்ள தயங்குகின்றனர் எனலாம். இதற்கு பின் பல்வேறு காரணிகள் உள்ளன. இருப்பினும் இந்த போக்கு பெரும்பாலும் உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் உயர்தர வர்க்கத்தினரிடமே அதிகம் காணப்படுகிறது. இந்திய நடுத்தர பொருளாதார சூழலில் லிவ்-இன் உறவு குறித்து பேசுவதே எட்டாக்கனி எனலாம்.
உத்தரகாண்டின் பொது சிவில் சட்டம்
இருப்பினும், பெருநகரங்களில் வர்க்க மற்றும் ஜாதி, மத பேதமின்றி இளம் ஜோடிகள் லிவ்-இன் உறவில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இது ஒருபுறம் இருக்க, உத்தரகாண்டில் சில மாதங்களுக்கு முன் நிறைவேறிய பொது சிவில் சட்டத்தில் (Uniform Civil Code) லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கும் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதாவது, எவ்வித சட்ட அங்கீகாரமும் வேண்டாம் என்ற சூழலில் உருவாகும் லிவ்-இன் உறவுக்கும் அச்சட்டம் கட்டுபாடுகளை விதித்தது
குறிப்பாக, அதில் திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் ஒரு மாதத்திற்குள் அதனை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பதிவு செய்யாவிட்டால் மூன்று மாத சிறை தண்டனை அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. லிவ்-இன் உறவில் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தாலும் அது சட்டப்பூர்வமாக அவர்களின் குழந்தையாக கருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்போக்கான தீர்ப்பு
இந்நிலையில், லிவ்-இன் உறவு குறித்த தீர்ப்பு ஒன்றை மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் இன்று வழங்கி உள்ளது. அதாவது, ஒரு தம்பதி சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ளாவிட்டாலும் அந்த பெண்ணுக்கு ஆண் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியிருக்கின்றன. இதன்மூலம், லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என வல்லுநர்கள் கருத்துகின்றனர்.
முன்னதாக, லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணுக்கு மாதாந்திர உதவித்தொகையாக 1,500 ரூபாயை வழங்க வேண்டும் என விசாரணை நீதிமன்றம் ஒருவருக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த நபர் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீது உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தம்பதியினர் ஒன்றாக லிவ்-இன் உறவில் வாழ்ந்ததற்கான ஆதாரம் இருக்கும்பட்சத்தில், உறவில் இருந்து பெண் விலகினால் அவருக்கு ஜீவனாம்சம் வழங்குவதை மறுக்க முடியாது என்று நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டிய உயர் நீதிமன்றம், அந்த லிவ்-இன் உறவில் ஆணும் பெண்ணும் கணவன் - மனைவியாக வாழ்ந்ததாக முடிவு செய்தது. மேலும், லிவ்-இன் உறவில் அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளதை கருத்தில் கொண்டு, அந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்குவதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மேலும் படிக்க | வயநாட்டின் வருங்காலம் யார்? களைகட்டும் தேர்தல் களம்... அனல் பறக்கும் பிரச்சாரம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ