புதுடெல்லி: மகாராஷ்டிராவின் நாசிக் நகரில், பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) 'மகாஜதானேஷ் யாத்திரை' பொது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோது, இன்று சத்ரபதி சிவாஜி மகாராஜின் வம்சாவளியான சத்ரபதி உதயனை புகழ்ந்து பேசினார். சத்ரபதி உதயன் பொறுப்பின் அடையாளமாக திகழ்ந்தார். அதன் மூலம் சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கு பெரும் மரியாதையை தந்துள்ளார். அவர் சிறந்த ஆசீர்வாதத்தை அனுபவித்து வருகிறார். இது அவரது வாழ்க்கையில் ஒரு மதிப்புமிக்க தருணமாககும் எனக் கூறினார்.
மேலும் பிரதமர் மோடி கூறுகையில், 2019 மக்களவைத் தேர்தல் உச்சத்தில் இருந்தபோது, நான் டிண்டோரியில் ஒரு கூட்டத்தை நடத்த வந்தேன். அந்தக் கூட்டத்தில் மக்கள் பெரும் அளவில் கலந்துக்கொண்டதால், அது பெரிய கூட்டம் இருந்தது. அந்த கூட்டம் நாடு முழுவதும் பாஜக அலைகளை இன்னும் தீவிரமாக்கியது. இன்று நாசிக் நகரில் நடக்கும் இந்த பேரணி பாஜக அலையை இன்னும் அதிகமாகிவிட்டது. முந்தைய அரசாங்கம் மகாராஷ்டிரா வேகமாக முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படவில்லை. அரசியல் காரணங்களுக்காக மகாராஷ்டிராவின் ஏழைகளையும், விவசாயிகளையும் பலியாக்கினார்கள்.
தேவேந்திர ஃபட்னாவிஸ் ஜி மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகள் இடைவிடாத மற்றும் தொடர்ச்சியாக பணிகளை செய்தார், மேலும் மாநிலத்தை ஒரு புதிய திசையை நோக்கி நகர்த்தினார் என்று மோடி கூறினார். தேவேந்திர ஜி தலைமையில் ஒரு நிலையான அரசியலை மீண்டும் பயன்படுத்திக் கொள்வது மகாராஷ்டிராவின் பொறுப்பாகும்.
மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது, 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, ஒரு அரசாங்கம் முன்பை விட மீண்டும் அதிக பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டது. மக்கள் அதிக அளவில் பலம் அளிக்கும்போது, அரசாங்கமும் அதே வேகத்தில் செயல்படுகிறது. அதற்கு சரியான உதாரணம் மத்திய அரசாங்கத்தின் முதல் 100 நாட்கள் சாதனை ஆகும். மக்களுக்கு என்ன தேவைகளை செய்ய வேண்டியுள்ள என்பது குறித்து வரவிருக்கும் 5 ஆண்டுகளுக்கான தெளிவான திட்டம் மத்திய அரசிடம் உள்ளது.
காஷ்மீர் குறித்து பேசிய மோடி, காஷ்மீர் எங்களுடையது என்று நேற்று வரை சொல்லிக்கொண்டிருந்தோம். இப்போது ஒவ்வொரு இந்தியனும் சொல்லுகிறார்கள், நாம் புதிய காஷ்மீரை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு வரும் காஷ்மீர் மக்களையும் அரவணைக்க வேண்டும். மீண்டும் அங்கே சொர்க்கத்தை உருவாக்க வேண்டும். ஆனால் மக்களின் இந்த விருப்பத்திற்கு புறம்பாக உறுதியற்ற தன்மையையும் அவநம்பிக்கையையும் பரப்புவதற்கான அனைத்து முயற்சிகளும் எல்லையைத் தாண்டி நடந்து வருவதை நாட்டு மக்கள் உணர்கிறார்கள். ஜம்மு-காஷ்மீரில் வன்முறையைத் தூண்டுவதற்கு நிறைய முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் ஜம்மு-காஷ்மீர் மக்கள் இந்த வன்முறையிலிருந்து வெளியேற மனம் வைத்துள்ளனர்.
ஆனால் எதிர்க்கட்சி மற்றும் அதன் பங்காளிகள் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் காண்கிறார்கள் என்று மோடி கூறினார். காஷ்மீர் விசியத்தில் காங்கிரஸ் மற்றும் என்.சி.பி.யின் மூத்த தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, ஷரத் பவார் போன்ற மூத்த தலைவர்கள் தவறான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் அண்டை நாட்டை விரும்புகிறார்கள். பயங்கரவாதத் தொழிற்சாலை எங்குள்ளது என்பது முழு உலகிற்கும் தெரியும் எனக் கூறினார்.