இன்று சனிக்கிழமை கொல்கத்தாவில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் பேரணி நடைபெற உள்ளது. இந்நிலையில் பேரணி நடைபெறும் பகுதிகளை சுற்றி உள்ள தெருக்களில் "பா.ஜ.க., "திரும்பிப் போக வேண்டும்" என்ற போஸ்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
மேற்கு வங்கம் மாநிலத்தின் பாஜக நிர்வாகிகள், இந்த போஸ்டர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சினர் தான் ஒட்டி இருக்கின்றார்கள் என குற்றம் சாட்டி உள்ளனர்.
மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் திலிப் கோஷ் அவர்கள், இன்று நடைபெறும் மனது பேரணியை பார்த்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பயப்படுகிறது. மேற்கு வங்கம் மாநிலத்தில் இந்த கட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது. மேற்கு வங்க மக்கள் பாஜக-வின் நல்ல ஆட்சிக்காக காத்திருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
மறுபுறத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், மாநிலத்தின் கல்வி அமைச்சர் பத்ரா சாட்டர்ஜி அவர்கள் பிஜேபி-க்கு எதிராக வைத்துள்ள போஸ்டருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் புருலியாவிற்கு அமித்ஷாவின் வருகையின் போதும், கடந்த மாதம் மேற்கு மிட்னாபூர் பேரணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையின் போதும் இதேபோன்ற போஸ்டர்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டி இருந்தார்கள் என பாஜக தேசிய பொதுச்செயலர் கைலாஷ் விஜயவர்கியா தெரிவித்தார்.
மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பாஜக இளைஞரணி சார்பில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு அமித் ஷா பங்கேற்க்க காவல்துறை அனுமதி அளிக்கவில்லை எனவும், எனக்கு கொல்கத்தா செல்ல அனுமதி அளித்தாலும் சரி, அளிக்காவிட்டாலும் சரி. நான் 11 ஆம் தேதி கண்டிப்பாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ப்பேன் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.